ராகு கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறும் கன்னி.. தொழிலில் அசுர வளர்ச்சி.. வீடு, வாகனம் வாங்கும் யோகம்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
கிரகப் பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான் இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை குரு பார்வை இருந்து வந்தது. ராசியில் கேது பகவான் அமர்ந்திருந்தார். ராசியில் இருந்து கேது பகவானை குரு பார்த்தாலும், நடுவில் குரு வக்கிரமானபோது புதிய புதிய பிரச்சனைகள், உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள், மருந்துகளால் பக்கவிளைவுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். தொழில், ஆரோக்கியம் என அனைத்து விஷயத்திலும் குழப்பமும், தீர்வில்லாத நிலையும் இருந்திருக்கும்.
7 ஆம் பாவத்தில் ராகு உங்களுக்கு நிறைய பிரச்சனைகள், உறவு முறை சிக்கலில் சிக்கியிருப்பீர்கள். வெளிநாட்டு தொடர்பு, வெளிநாட்டில் பிரச்சனை, ஆவணங்கள் அங்கீகரிக்கப்படாதது, பயணங்களால் பிரச்சனை, அபராதம், தண்டனைகளை சந்தித்திருப்பீர்கள். ராசிக்கு குரு பார்வை இரும்போதே பல பிரச்சனை, தற்போது பத்தில் குரு வரப் போகிறது. பத்தில் குரு பதவி போகும் என்பது ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
முன்னேற்றம், வளர்ச்சி
10 ஆம் பாவத்தில் குரு வந்து அமரும்போது தான் 6 ஆம் பாவத்தில் இருக்கும் ராகுவைப் பார்க்கிறார். 6 ஆம் பாவம் என்பது போட்டித் தேர்வுகளில் நிறைய வெற்றி வாய்ப்புகளைக் கொடுக்கும். 6 ஆம் பாவத்தில் ராகு அமரும்போது மின்னல் வேகத்தில் மேலே செல்வதற்கான யோகம் உண்டாகும். அதிலும் ராகு குருவின் பார்வையில் அமருவதால் அமோகமான காலகட்டமாக இருக்கும்.
வெளிநாடு செல்லும் யோகம்
வம்பு, வழக்கு, நோய், எதிரி, கடன், பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 7 ஆம் பாவத்தில் சனி வந்தாலும், புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய அளவில் தாக்கம் இருக்காது. 6 ஆம் பாவத்தில் வரும் ராகு 500 சதவீத நன்மையைத் தரும். இந்த காலகட்டத்தை பரிபூரணமாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ராகு பகவான் முதலில் குருவின் சாரத்தில் வரும்போது இடம், வாகனம், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில், தொடர்புகள், களத்திரம், வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மை உண்டாகும்.
அசுர வளர்ச்சி
ராகு சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது எதிர்பாராத விதமாக விஸ்வரூப வளர்ச்சி ஏற்படும். தொழிலில் அருமையான வளர்ச்சியைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வெற்றி, திடீர் ராஜயோகத்தைப் பெறுவீர்கள். இடம், வாகனம், வீடு விஷயங்களில், வழக்குகளில் நன்மையைப் பெறுவீர்கள்.
எதையோ இழந்தது போன்ற எண்ணம் விலகும். நீண்டநாட்களுக்குப் பிறகு உங்களுக்கு தெளிவு, சந்தோஷம் பிறக்கும். 12 ஆம் வீட்டில் கேது அமருவதால் வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் மட்டும் சிறிது கவனமாக இருக்க வேண்டும். தூங்கும்போது குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
தெய்வ வழிபாடு
ராகு கேதுவுக்கு என பிரத்தியேக வழிபாடு தேவையில்லை. இஷ்ட தெய்வம், குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையைத் தரும். குரு பகவானுக்காக வியாழக்கிழமைகளில் சித்தர் வழிபாடு, மகான்கள் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications