கும்பத்துக்கு இன்பமான காலம் ஆரம்பம்.. தொட்ட காரியங்களில் ஜெயம்.. பணக்காரராக மாறும் யோகம்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
கிரகப் பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான் இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து விட்டீர்கள். ராசிக்கு 2 ஆம் இடத்தில் இருந்த ராகு என்ற கிரகமும் இவர்களுக்கு பல விதங்களில், பல துன்பங்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. ஏழரை சனியில் அதிகமாக பாதிக்கப்பட்டது கடகம், மகரம், கும்பம், மீன ராசிக்காரர்கள் தான். ராசிக்கு 2 ஆம் இடத்தில் இருந்த ராகு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை, பணப் பிரச்சனை போன்றவற்றை கொடுத்திருப்பார். ராசிக்கு 4 இல் இருந்த குரு அர்த்தாஷ்டம குருவாக நிறைய தோல்வி, அவமானத்தைக் கொடுத்திருப்பார்.
வேகமாக செயல்படும் காலம்
ஒரே நேரத்தில் 4 கிரகங்களால் உச்சகட்ட பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். ராசிக்கு குரு பார்வை வருவதால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வும், தெளிவும் கிடைக்கும். ராசிக்கு ராகு வந்து அமருகிறது. அந்த ராகுவை குரு பார்க்கிறார். ராகு ராசியில் இருக்கும்போது அந்த ராசிக்காரர்கள் மிகுந்த பரபரப்பாக இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்கள் பொதுவாகவே ஸ்லோவாகத்தான் இருப்பார்கள்ய ராகு பெயர்ச்சிக்குப் பின்னர் படு வேகமாக இருக்கத் தொடங்குவீர்கள்.
தொட்ட காரியம் துலங்கும்
எதாவதொரு விஷயத்தில் பிடிவாதத்தையும், தீவிரத்தையும் உங்களுக்கு ஏற்படும். எடுத்த காரியங்களில் முடிவை, வெற்றியைப் பார்க்காமல் அதனை விடமாட்டீர்கள். அந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்து சிந்தித்து அதற்கு தீர்வு காண்பீர்கள். தொழில், உற்சாகம், அபிவிருத்தி கொடுக்கக்கூடிய விஷயத்தில் கவனம் செலுத்தி வெற்றிக் கனியைப் பறிக்கு ராகு கை கொடுப்பார்.
பணவரவு கொட்டும்
வருமானம், லாபம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குகளை காப்பாற்றுவீர்கள். இனி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல், டெபிட் கார்டுகளை பயன்படுத்துவீர்கள். அந்தப் பணம் பல மடங்காக அதிகரிக்கும். வாய்ப்புகள், வருமானங்கள் கைகூடி வரும். ராகு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது கும்பத்திற்கு 3, 10 ஆம் பாவத்துக்கு அதிபதியாக செவ்வாய் வருவதால் இடம், பூமி, சகோதரர், தொழில் விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள், வருமானம், அபிவிருத்தி ஏற்படும்.
திருமணத்தில் கவனம்
7 ம் பாவத்தில் கேது பகவான் வருவதால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவி உறவுக்குள் சிக்கல் வந்தால் அமைதியாக இருப்பது நல்லது. புதிதாக திருமணம் செய்ய காத்திருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள், இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் கூட்டாளிகளால் சிறு சிறு சிக்கல்கள் வரும். இருப்பினும், ராகு நிறைய நேர்மறையான விஷயங்களையும், வாய்ப்புகளையும் கொடுக்கப் போகிறார். எங்கே தோற்றீர்களோ அங்கிருந்தே இனி வாழ்க்கையை தொடங்குவீர்கள்.
வழிபாடு
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, மகாவிஷ்ணு, பெருமாள் வழிபாடு நன்மைகளைத் தரும். பிரதான நரசிம்மர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது. நரசிம்ம யாகம், நரசிம்ம பலி கொடுப்பது நல்லது. மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வது நல்ல மேன்மையைத் தரும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications