மகர ராசிக்கு ராகு கேதுவால் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. இடம், பூமி, தொழிலில் அடிச்சது லாட்டரி
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
கிரகப் பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான் இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவடைந்துள்ளது. படாத கஷ்டங்களை எல்லாம் பட்டு விட்டீர்கள். இனி உங்களுடைய 5 ஆம் பாவத்தில் பார்த்துக் கொண்டிருந்த குரு 6 ஆம் இடத்தில் மறைகிறார். 2 ஆம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் வருகிறார். அஷ்டமத்தில் கேது வருகிறார். 2 ஆம் இடத்தில் ராகு வந்து அமரும்போது 2 ஆம் வீட்டின் அதிபதியாக செயல்படுவார்.
வெற்றி
2 ஆம் வீட்டின் அதிபதி சனி பகவான் அசுப கிரகமாக செயல்படப் போவதில்லை. குருவின் பார்வையில் வந்து சனி அமருவதால் குரு சண்டாள யோகமாக மாறும். நம்மை மேலும் மெருகேற்றிக் கொள்வதற்கும். விரிவுபடுத்திக் கொள்வதற்குமான காலகட்டமாக இருக்கும். தனம், குடும்பம், வாக்கு மூன்று வாக்கியங்களிலும் விஸ்தாரமான வெற்றியைப் பெறுவீர்கள்.
பண வரவு அதிகரிக்கும்
பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கொடுத்த வாக்கினை சமுதாயத்திலும், குடும்பத்திலும் காப்பாற்றுவீர்கள். ராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது ஒப்பந்தங்கள் மூலமாகவும், வெளிநாட்டு தொடர்புகள் மூலமாக வெற்றி ஏற்படும். இரவு நேரத்தில் அழுது கொண்டிருந்த நிலை எல்லாம் மாறும். பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு உண்டாகும்.
தொழிலில் முன்னேற்றம்
சதயம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்யும் போது தொழில் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குரு பார்வை கிடைப்பதால் ராகு கெடுதலான சுபாவங்களை இழந்து மகர ராசியினருக்கு பாசிட்டிவான விஷயங்களை கொடுப்பார். மேலும் இடம், பூமி, வாகனம் சம்பவந்தப்பட்ட விஷயங்கள், தொழிலில் அபிவிருத்தி, தொழில் விஸ்தாரம், தாய்க்கு அரசுத் துறை வேலைவாய்ப்பு, பூர்விக சொத்துகள் கிடைப்பது போன்றவற்றைக் கொடுக்க ராகு கேது பெயர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் கவனம்
ஏழரை சனியில் இருந்து விடுதலை. இதுநாள் வரை சந்தித்த தோல்விகள், துன்பங்களை சந்தோஷமாக மாற்றுவதற்கான காலகட்டமாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் கேது வருவதால், அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், சட்ட விரோதமான விஷயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இல்லாவிடில் அபராதம் கட்டும் நிலை ஏற்படும். குழந்தைகள், தொழில் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்வது, பிள்ளைகளின் புதிய அறிமுகங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். இளம்வயதில் இருப்பவர்கள் புதிய உறவுகளில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வது கைமேல் பலன் தரும். ஆஞ்சநேயர் வழிபாடு, அனுமன் சாலிஷா பாராயணம் செய்வது நல் பலன்களைத் தரும். பிள்ளையார், மகாகணபதி வழிபாடு, மனித தலை இல்லாத கடவுளை வணங்குவது நல்லது. மருத்துவ உதவி தேவைப்படுவர்களுக்கு உதவி செய்வது, பாத யாத்திரை செல்பவர்களுக்கு உதவி செய்வது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications