மீன ராசிக்கு ஜென்ம சனி அச்சமே வேண்டாம்.. ராகு கேது பெயர்ச்சியால் கிடைக்கும் சூப்பர் அதிர்ஷ்டம்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
கிரகப் பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீனம் ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 12 ஆம் பாவத்தில் சனி பகவான் வந்து நிறைய பிரச்சனைகளைக் கொடுத்திருப்பார். சனியால் மட்டும் தான் பிரச்சனையா என்றால் இல்லை. ராசியில் இருந்த ராகு அதை விட பெரிய பாதிப்புகளை கொடுத்திருப்பார். இந்த ராகு கேது பெயர்ச்சியில் ராகு ராசியை விட்டு வெறியேறுவதால் ஏராளமான நன்மைகளைப் பெறுவீர்கள். கேது 7 ஆம் பாவத்தை விட்டு 6 ஆம் பாவத்துக்கு வரப் போகிறார்.
மேன்மை
6 இல் கேது 12 இல் ராகு வரப் போகிறார். ராகுவை குரு பார்ப்பதால் குரு சண்டாள யோகம் உண்டாகும். இனி பல பிரச்சனைகளுக்கு உங்களுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. முதலில் ராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது, குரு என்பவர் ஜீவனத்துக்கும் அதிபதியாக வருவதால் தொழிலில் மூலம் மேன்மை பெறுவீர்கள். அமோகமான பண வரவைப் பெறும் காலகட்டமாக அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.
பண வரவு அதிகரிக்கும்
ராசியில் உள்ள சனி நிறைய விரையத்தைக் கொடுத்தாலும் செலவுக்குண்டான வருமானத்தை ராகு பகவான் கொடுப்பார். ராகு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது தனம், குடும்பம், வாக்கு, பாக்கியம் ஆகிய ஸ்தானங்கள் வலுப்பெறப் போகின்றன. சமுதாயத்திலும், வீட்டிலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். இடம் பூமி விஷயங்களில் அபிவிருத்தியைப் பெறுவீர்கள். சகேோதர சண்டை, பங்காளிகள் சண்டை எல்லாம் மாறும். தந்தையுடன் சமூக உறவு ஏற்படும். இனி உங்களுக்கு அனுகூலமான நிலை ஏற்படும்.
திருமண சிக்கல் நீங்கும்
7 இல் கேது பகவான் இருந்து உறவு முறையில் சிக்கல் ஏற்படும். திருமணத்தில் சிறு சிறு குளறுபடிகளால் ரத்து செய்வதற்கான சூழல் ஏற்பட்டிருக்கும். திருமணத்தில் குழப்பம், குளறுபடிகள், நிறைய பேர் மாற்று மொழி, மாற்று இனம், வெளிநாட்டுக்குச் சென்று அந்த ஊர்காரரை திருமணம் செய்தால் தான் அந்நாட்டின் குடியுரிமை கிடைக்கும் என்று இருந்த நிலைகள், சிக்கல்கள் எல்லாம் விலகும். உறவுமுறை சிக்கல்கள் தீரும். திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு தெளிவு ஏற்படும்.
கடன் தீரும்
மருத்துவ சிகிச்சைகள் கைகொடுக்கும். திரும்பத் திரும்ப கடனில் சிக்கியவர்கள் அதில் இருந்து பூரணமாக விடுதலை அடைவீர்கள். ஜென்ம சனி சிறிய சிக்கல்களை கொடுத்தாலும், ராகு கேது பெயர்ச்சி பெரிய முன்னேற்றத்தைக் கொடுப்பார். இனி நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும். ஒரு வருடத்தில் ராசிக்கு குரு வந்துவிடுவதால் ஜென்ம சனியும் பெரிய பிரச்சனையை ஓராண்டுக்குத் தராது.
வழிபாடு
வெளிநாட்டுத் தொடர்பு, தொழில் துறை சார்ந்த விஷயம், கல்வியில் கவனமாக இருப்பது நல்லது. சனி, ஞாயிறில் செவ்வரளியைக் கொண்டு துர்க்கையை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். துக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அம்மன் வழிபாடு அமோகமான பரிகாரமாக இருக்கும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications