துலாம் ராசிக்கு வெற்றி மேல் வெற்றி.. திடீர் அதிர்ஷ்டத்தால் பண மழை கொட்டும்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
கிரகப் பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான் இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார்கள். இனி உங்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். கோச்சாரத்தில் இதுநாள் வரை இரண்டு இடங்களால் பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். அஷ்டமத்தில் குரு, 12 இல் கேது இவை இரண்டும் தான் பிரச்சனை. அஷ்டம குரு கடந்த 10 மாதங்களாக பல்வேறு பிரச்சனைகளைக் கொடுத்திருக்கும். உங்களுக்கு பகை கிரகமான குரு பகவான் 8 ஆம் இடத்தில் வந்து படாதபாடு படுத்தியிருக்கும். நிறைய தோல்விகள், அவமானங்களைச் சந்தித்திருப்பீர்கள்.
குரு சண்டாள யோகம்
நிறைய பேருக்கு வாடகை கொடுக்க முடியாத நிலை இருந்திருக்கும். வாடகைக்கு வந்திருப்பவர்கள் பணம் கொடுக்காமல் இருந்திருப்பார்கள். நிறைய உடல் தொடர்பான பிரச்சனை, முழங்கால், கால், கொழுப்பு பிரச்சனைகள் இதுநாள் வரை இருந்திருக்கும். ராகு கேது பெயர்ச்சியில் ராகு 5 ஆம் இடத்துக்கு வருகிறது. பூர்வீகம், குழந்தைகள், புத்திர ஸ்தானத்தில் பிரச்சனை வரும் என்று நீங்கள் கருதலாம்.
ஆனால், ராகுவுக்கு குரு பார்வை இருப்பதால் உங்களுக்கு குரு சண்டாள யோகமாக மாறும். லாப ஸ்தானத்தில் கேது பகவான், 5 இல் இருக்கும் சனி 6 இல் இருக்கிறது. 4 கிரகங்களால் அனுகூலம் உண்டாகும். நிறைய கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இனி அடையும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். சொன்ன விஷயங்களை செய்து முடிப்பீர்கள்.
புதிய வாய்ப்புகள்
ராகு சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் போது புதிய வாய்ப்புகள், புதிய ஆர்டர்கள் வந்து சேரும். ராகு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது வாழ்க்கை துணைவர், வியாபார கூட்டாளி, நட்பு போன்ற அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். 12 இல் கேது அமர்ந்து உங்களுக்கு பிரச்சனை, குழப்பத்தை கொடுத்து தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்திருக்கும்.
லாபம் கொட்டும்
தற்போது கேது லாப ஸ்தானத்தில் வந்து அமருகிறார். சூரியனின் நட்சத்திரத்தில் கேது சஞ்சாரம் செய்யும்போது அரசாங்கம், பித்ரு வர்க்கத்தால் மேன்மை பெறுவீர்கள். சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது சஞ்சாரம் செய்யும்போது உங்களுக்கு திடீர் யோகம், திடீர் லாபம் உண்டாகும். நிறைய வெளிநாட்டு தொடர்புகள், வெளிநாட்டு பயணங்கள் உண்டாகும்.
எச்சரிக்கை
துலாம் ராசியை குரு பார்ப்பதால் கோடி நன்மைகளைப் பெறுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் இனி வெற்றியைச் சந்திப்பீர்கள். பல நாள் துன்பங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி முற்றுப்புள்ளி வைக்கக்கூடியதாக இருக்கும். புத்திரர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளினஅ படிப்பை தேர்ந்தெடுப்பது, புதிய நபர்கள் அறிமுகம், ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வழிபாடு
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்கை வழிபாடு செய்து நல்லது. பிரதான துர்கா கோவில்களுக்குச் சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபாடு அருமையான பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications