ராகு கேது பெயர்ச்சி 2023: ராகுவால் காரியத்தடையா? இந்த விசயங்களை கண்டிப்பாக பாலோ பண்ணுங்க
சென்னை: எந்த காரியத்தை தொட்டாலும் தடையாக இருக்கும். திருமண தடை, வேலை கிடைப்பதில் தடை என பல தடைகளும் ஏற்பட ராகு கேது கிரகங்கள் காரணமாக இருக்கும். சர்ப்பதோஷம், கால சர்ப்ப தோஷம் என பல தோஷங்கள் ராகு கேதுவினால் ஏற்படும். பிறந்த ஜாதகத்தில் ராகுவினால் ஜனன ஜாதகத்தில் ராகு,கேதுவால் பிரச்சினை இருப்பவர்கள் சில பரிகாரங்களை செய்தால் ராகு கேதுவினால் ஏற்படப்போகும் பாதிப்பை தடுக்கலாம்.
ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகு அள்ளித்தருவார். கேது ஞானகாரகன். இரண்டு கிரகங்களும் எதிர் எதிரே அமர்ந்து பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை. ஒருவரின் ஜாதகத்தில் ராகு பலம் பெற்று இருந்தால் ருசியாக உப்பு, காரமாக சாப்பிட வேண்டும் என நாக்கு தூண்டும். பிறந்த ஜாதகத்தில் ராகு கெட்டு இருக்கும் போது ஊறுகாய் அதிகம் சாப்பிட்டால் உடல் நல பாதிப்பு உண்டாகும்.

பிறந்த ஜாதகத்தில் ராகு உடன் சந்திரன் அல்லது கேது உடன் சந்திரன் இணைந்திருந்தால் செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடலாம். ஊறுகாய், அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை குறைத்து சாப்பிடலாம்.
பிறந்த ஜாதகத்தில் ராகு உடன் சூரியன், ராகு உடன் சனி கூட்டாக அமர்ந்து இருந்தாலும் பார்வை பெற்றிருந்தாலும் பெருமாள் கோவிலுக்கு சென்று கருடனை வழிபடலாம். கோவில்களில் கருடசேவை நடைபெறும் போது தரிசனம் செய்யலாம்.
ஜாதகத்தில் ராகு சூரியன் சுக்கிரன் கெட்டவருக்கு சரபேசுவர் வழிபாடு மிகப்பெரிய நன்மை தரும். ராகுவும் செவ்வாயும் பாதிக்கப்பட்டவர்கள் கர்நாடகாவில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவில் சென்று வணங்க பாதிப்புகள் குறையும். பிறந்த ஜாதகத்தில் ராகு புதன் பாதிக்கப்பட்டிருந்தால் தோல் வியாதி வரும். நரம்பு பிரச்சினை ஏற்படும். திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கலாம். பாதிப்புகள் குறையும்.
ராகு பாதிக்கப்பட்டவர்கள் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். குடும்ப ஒற்றுமையை குலைக்க நினைக்கக் கூடாது. அடுத்தவர்களின் குடும்ப பிரச்சினையில் குறிப்பாக கணவன் மனைவி பிரச்சினையில் தலையிட்டு அவர்களை பிரிக்க நினைக்கக்கூடாது. அதிக பொய் ஆபத்தை ஏற்படுத்தும்.
தொழு நோயாளிகளைக் கிண்டல் செய்யக்கூடாது. நம்மால் முடிந்த அளவிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கி தரலாம். புற்றுள்ள கோவில்களுக்கு சென்று வணங்கலாம். சமயபுரம் மாரியம்மனை வணங்க ராகுவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் தாத்தா பாட்டியின் ஆசி அவசியம். ராகுவும் கேதுவும் தாத்தா பாட்டியை குறிக்கும் காரகங்கள். எனவே வீட்டில் தாத்தா பாட்டியிடம் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தர வேண்டும். இதன் மூலம் தாத்தா பாட்டியின் ஆசி கிடைக்கும்.

அதே போல ஞானகாரகன் ஆன கேது வலிமை இழந்து காணப்பட்டால் விநாயகர் வழிபாடு நன்ம செய்யும்.
சரபேஸ்வரர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு நன்மை செய்யக்கூடியது. பிறந்த ஜாதகத்தில் கேது சுக்கிரன் கெட்டு இருந்தால் ப்ரத்யங்கிரா வழிபாடு நல்ல பலனை கொடுக்கும். பிறந்த ஜாதகத்தில் சந்திரன் உடன் கேது இணைந்து இருந்தால் முருகன் வழிபாடு நன்மையை கொடுக்கும். வயதானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பைரவர் வழிபா பயத்தை போக்கும்.
ஜாதகத்தில் கேது புதன் சேர்க்கை பெற்று பலம் குறைந்த நிலையில் இருந்தால் ஏதாவது ஒரு விசயத்தில் அவமானப்பட வேண்டியிருக்கும். அனுமன் வழிபாடு மன ஆறுதலைத்தரும். கேதுவினால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்தாலும் கோவில் கோவிலாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
முருகன் வழிபாடு செய்வதால் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications