கடக ராசியினருக்கு தொழில் தொடங்கும் யோகம்.. சனி, குருவின் அருளால் அதிர்ஷ்டம் கொட்டும்
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்கும் போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியினருக்கு அஷ்டமத்தில் ராகு இருக்கிறார். 2 ஆம் இடத்தில் கேது இருக்கிறார். தஞ்சாவூரில் உள்ள பட்டீஸ்வரம் துர்கை கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. துர்கை சந்நிதானத்தில் 34 எலுமிச்சை, நெய், விபூதி, குங்குமம் கொடுத்து வழிபடுவது நல்லது. அதில் 1 எலுமிச்சையை மட்டும் வீட்டுக்கு வாங்கி வந்து வைத்து தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
வார்த்தையில் கவனம்
வயிறு தொடர்பான பிரச்சனைகள், மன அழுத்தத்தால் அவதி ஏற்படும். வேறு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. 9 இல் சனி எல்லாவிதத்திலும் ஏற்றம், 12 இல் குரு
சுப விரைய பிராப்தம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் செய்வீர்கள். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது நல்லது. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கோபப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு எந்தவொரு பெரிய முடிவையும் எடுக்க கூடாது. பொறுமையை கையாளுவது நல்லது.
தொழில்
பொறுமையைக் கடைப்பிடித்தால் பெரிய மாற்றங்கள், மகிழ்ச்சி உண்டாகும். வாகன அமைப்பில் மாற்றம் உண்டாகும். தனிப்பட்ட தொழில் தொடங்கும் அமைப்பு ஏற்படும். அடிமைத் தொழிலில் இருந்து விடுபட்டு புதிய தொழில் தொடங்குவதற்கான தைரியம் ஏற்படும். தாய் வழி, தந்தை வழி உறவால் அனுகூலம் உண்டாகும்.
பயணம்
ஓய்வெடுப்பதற்காக சுற்றுலா, தெய்வ ஸ்தலங்களுக்குச் செல்வது, மலைக் கோயில்களுக்குச் செல்வது, மருத்துவத்தில் சிறு அறுவை சிகிச்சை செய்வது போன்ற விஷயங்களைச் செய்வீர்கள். ஆச்சரியத்தக்க முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் பெரியோர்களுடன் இருக்கும் சிறு மனத் தாங்கல்களையும் கண்டிப்பாக தீர்த்து வைப்பது நல்லது.
வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது
பெரியோர்களில் தேக ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது. பூர்வீக சொத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை பேசித் தீர்த்துக் கொள்வது, சமாதான உடன்படிக்கை செய்து கொள்வது நல்லது. அண்டை அயலாருடன் சண்டை, தகராறு, வாக்குவாதம், அவர்களுடைய குடும்பத்தில் தலையிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நன்மையைத் தரும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications