ராகு கேது பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
ராகு கேது பெயர்ச்சி: அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ராகு கேது பெயர்ச்சி விரைவில் நிகழவுள்ளது. இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், நல்ல பலன்களை கொடுக்குமா, பின்னடைவு ஏற்படுமா என்று எண்ணம் மக்களுக்கு இருக்கும். இந்தக் கட்டுரையில் ராகு கேது பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள் குறித்து விவரித்துள்ளோம்.
சர்ப்ப கிரகங்கள்
ராகு கேது என்பது சர்ப்ப கிரகங்கள். இதனை நிழல் கிரகம் என்றும் அழைப்பார்கள். இந்நிலையில், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின்படி சர்ப்ப கிரகங்களுக்கு ஸ்தான பலம் கிடையாது.

கவனம்
18 மாதங்களுக்கு ஒருமுறை ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி இருக்கும். ராகு கேது கிரகங்கள் பின்னோக்கி தான் நகரும். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சியில் சந்திரன் சேர்க்கையுடன் இருக்கும் ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.
6 ராசிகள்
ராகு பிரம்மாண்ட சிந்தனை, மாயை, ஆசை என்று பலவற்று காரணமாக இருப்பார். செய்யக் கூடாது விஷயங்களை செய்ய வைப்பார். உணவு ஒவ்வாமை பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதன்படி 2025 ராகு கேது பெயர்ச்ச்யில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள், அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சந்திரன் சேர்க்கை
மிதுனம், துலாம், கும்பம் ராசிகள் ராகு - சந்திரன் சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில உங்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும். வெளி மாநிலம், வெளி நாடு சம்பந்தப்பட்ட பயணங்கள் அணுகூலமாகும். வீண் பயம், குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவர்கள் முடிந்தவரை தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் மனம் விட்டு பேச வேண்டும்.
அதிதேவதை
உணவு, தண்ணீர் அதிகளவு தானம் செய்ய வேண்டும். கிரகத்தின் அதிதேவதை வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும். காளி, துர்கை, பிரத்யங்கார தேவி ஆகியோர் ராகுவின் அதிதேவதைகளாவர். இவர்களை திங்கள் கிழமை ராகு காலத்தில் வழிபடுவது அதிகளவு நன்மையை தரும். வீட்டில் தினசரி காலை அகல் விளக்கு ஏற்றி பிரத்யங்கார ஸ்லோகம் பாடினால் பயம் நீங்கும்.
கண்காணிப்பு
வெளியூர்களில் கல்வி, உத்யோக நிமித்தமாக உள்ள குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். இந்த காலத்தில் அவர்களுடன் தங்குவது கூடுதல் சிறப்பு. இந்த ராசியினர் நீர் சம்பந்தப்பட்ட இடங்களில் விளையாடக் கூடாது. எல்லா இடங்களிலும் தனியாக செல்லாமல் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். பயணங்களையும் தனியாக மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
விநாயகர்
அதேபோல கேது பெயர்ச்சியால் மேஷம், சிம்மம், தனுசு ராசிகள் கவனமாக இருக்க வேண்டும். மனதளவில் அதிக அழுத்தங்களை சந்திப்பார்கள். இவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதிகளவு தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். நீராகாரம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த ராசிகள் விநாயகர் வழிபாட்டை கையில் எடுக்க வேண்டும்.
குரு
பங்குச்சந்தை, முதலீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ராகு கேது பெயர்ச்சியை நினைத்து இந்த ராசிகள் பயப்பட தேவையில்லை. குருப்பெயர்ச்சி நிகழ்வதால், குரு பார்வை அடுத்த ஒரு வருடம் இந்த ராசிகளுக்கான கெடு பலன்களின் தாக்கத்தை குறைப்பார். அனைத்து ராசிகளுமே கால பைரவர் வழிபாட்டை செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications