ராகு கேது பெயர்ச்சி: குரு சனி ராகுவின் அருளால் தனுசுக்கு அடிச்ச ஜாக்பாட்..தொட்ட காரியங்கள் துலங்கும்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.
2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு மூன்று விதமான அனுக்கிரகம் கிடைக்கப் போகிறது. குரு பார்வை, சனி பார்வை, ராகு குரு பார்வையுடன் 3 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். சிஸ்டம், ஐடி, சாஃப்ட்வேர், கம்யூனிகேஷன், ஆராய்ச்சி, அயல்நாடு, விமானம், டிராவல் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும்.
3, 9க்குரிய பாவங்களில் ராகு கேது அமரும்போது யூகம் செய்யக்கூடிய சக்தி 100 மடங்காக மாறும். அராளக்கூடிய, நாடாளக்கூடிய நபர்கள் யாரை எடுத்துக் கொண்டாலும் பஞ்ச மகா புருஷ யோகங்கள் முக்கியமாக ராகு கேது மூலமாக நடக்கும். அதில் 3 ஆம் இடத்தில் அல்லது 9 ஆம் இடத்தில் ராகுவோ கேதுவோ மக்களுடைய மனதை கிரகிக்கக்கூடிய, இன்டியூசன் பவர் இவர்கள் மூலமாக தெரியும். தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பார்வையோடு ராகு இருப்பதால் உங்கள் மனதில் பட்ட காரியங்கள் நடக்கும்.
பாக்கிய ஸ்தானத்தில் கேது உட்காருவதால் தனித்தனியாக எல்லா விஷயங்களும் இதுதான் நடக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரியும். இந்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு பாசிட்டிவாக இருக்கும். 3, 9 என்பது கம்யூனிகேசன் பாவங்கள். யோகமான காலகட்டமாக உங்களுக்கு வரும். வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
3 ஆம் இடத்துக்கு ராகு வந்தால் வேறு ஊருக்கு இடமாற்றம் யோகம் உண்டாகும். இருக்கும் துறையில் இருந்து வேறு துறைக்கு மாறும் யோகம் உண்டாகும். இந்த மாதிரி வாய்ப்புகள் மறுபடி மறுபடி வராது. பூர்வீகத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற வேண்டிய சூழல் ஏற்படும். பூர்வீகத்தில் ஒரு விநாயகர் கோயிலை பிரதிஷ்டை செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
9 ஆம் இடத்தில் கேது வருவதால் காசி, பத்ரிநாத் போவதற்கு உண்டான சூழல் உண்டாகும். பெரிய விஷயங்கள் எல்லாம் மிகச் சாதாரணமாக நடக்கும். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்க தெய்வ அனுக்கிரகம் வேண்டும் என்று சொல்லக் கூடிய விஷயங்கள் கூட உங்களுக்கு மிகச் சாதாரணமாக நடக்கும். கடன் தீரக் கூடிய வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள்.
இனிமேல் வரக்கூடிய வருமானங்கள் எல்லாம் பல வழிகளில் இருந்து இரண்டு, மூன்று வருமானம் வரும் வகையில் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். குரு பார்வை ராசி, லக்னத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சனி பார்வையும் வந்துள்ளதால் வேலை விஷயம் இனி நிரந்தரமாக இருக்கும் என்ற தைரியம் ஏற்படும். நீங்கள் செய்யும் காரியங்களில் எல்லாம் ஒரு வலிமை உண்டாகும்.
மனதில் இருந்து வந்த பயங்கள் நீங்கும். 3 ஆம் இடத்தில் அசுர கிரகங்கள் இருப்பது நல்லது. அந்த வகையில் ராகு உங்களுக்கு 3 ஆம் இடத்துக்கு வந்துள்ளதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரங்கள்: மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். ஏகாதசியன்று சென்று ராகவேந்திரரை வழிபடுவது நல்ல மாற்றத்தை தரும்.












Click it and Unblock the Notifications