ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் ராசிக்கு அசுர வளர்ச்சி.. தொட்டதெல்லாம் ஜெயமாகும் யோகம்.. பணம் கொட்டும்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.
2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல தொழில் இல்லை. வேலைக்குச் சென்றாலும் அங்கு பெரிய மரியாதை இல்லாத சூழ்நிலை இருந்திருக்கும். உங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை மற்றவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும். உழைப்புகேற்ற அங்கீகாரம், ஊதியம் இல்லாமல், வேலை இல்லாமல் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நிலை எல்லாம் உங்களுக்கு மாறப் போகிறது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது பொன்னான காலமாக இருக்கும். ராகு உங்களுக்கு வெளிநாடு, வெளியூர் சென்று வேலை பார்க்கும் யோகத்தைக் கொடுக்கப் போகிறார். பெரிய பதவிகளில் நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல காலகட்டமாக இருக்கும். 10 ஆம் ஸ்தானம் என்பது தொழில் ஸ்தானம்.
அந்த தொழில் ஸ்தானத்தில் ராகு அமருவதால் தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும். பொக்லைன் போன்ற கன ரக வேலை செய்பவர்கள், டிரான்ஸ்போர்ட், கப்பல் சம்பந்தப்பட்ட வேலை, டிராவல் செய்வது, மெடிக்கல் துறையில் ஆராய்ச்சி செய்வது போன்றவற்றுக்கான காலகட்டமாக இருக்கும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். 10 ஆம் இடம் ஜாதகருக்கு சரியாக இருந்தால் அதிகபட்ச புகழ், பணம், கெளரவம் உண்டாகும்.
பெண்கள் ஆளுமை அதிகமாக இருக்கும். நிறைய ரிஷப ராசிக்காரர்கள் தொழில் முனைவோராகும் வாய்ப்புண்டு, கலையில் நல்ல காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காசு பணத்திற்கு பிரச்சனையே இருக்காது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: மார்புப் பகுதி பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். தாயாருடன் சலசலப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சொந்த வீட்டில் சில பேருக்கு பிரச்சனை ஏற்படும்.
பரிகாரங்கள்: உங்கள் வீட்டின் இடதுபுறம் இருக்கும் விநாயகர் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். அகத்தியர் வழிபாடு அமோகமான பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications