Weekly rasi palan: துலாம் ராசிக்கு சுக்கிரன் அருள்.. பணவரவு பெருகும், தொட்ட காரியம் வெற்றியாகும்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-thulam-rasi-people-from-sep-14-to-20

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், துலாம் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம், ஏற்றம் உண்டாகும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும். மனதில் ஒரு இனம்புரியாத தன்மை ஏற்படும். அலைச்சல்கள் ஏற்படும். ஆனாலும், நிறைய ஏற்றங்கள் உண்டாகும்.

ஆரோக்கியம்

நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலரால் பாராட்டப்படும். பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதுகு, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கால் பகுதிகளில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.

கவனம்

கடனால் சிக்கிக் கொள்ளும் அமைப்பு உள்ளது. ஐடி பிரச்சனைகள், ஆவணங்களில் பிரச்சனைகள், இரவு நேரப் பயணங்களில் சிக்கிக் கொள்வது போன்ற அமைப்பு உள்ளது. நிறை. டென்ஷன் ஏற்படும். இருக்கும் வேலையை விடும் நிலைமை, புதிய வேலைக்குச் செல்வது, வேலை வேண்டாம் தொழில் செய்து கொள்ளலாம் என்கிற விரக்தி மனநிலை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அடுத்த ஒரு மாதம் நிம்மதி, தூக்கம் இருக்காது.

சுக்கிரன் அருள்

செப்டம்பர் 18 ஆம் தேதி வரை அற்புதமான யோகங்கள் கிடைக்கும். சுக்கிரனால் நிறைய நன்மைகள் ஏற்படும். அதன் பிறகே இந்த பாதிப்புகள் இருக்கும். யாரையும் நம்பி பணம் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏமாந்து போவற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

தொட்டது துலங்கும்

எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தடையில்லாத வெற்றிகள் கிடைக்கும். எலும்புகள் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரும் அமைப்பு உள்ளது. அனந்த பத்மநாதன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். திங்கள்கிழமைகளில் பெருமாள் வழிபாடு, விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. ஆரோக்கியம், செலவுகளை மட்டும் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+