Weekly rasi palan: சிம்ம ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-simmam-people-get-from-october-19-to-25

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

அதன்படி, அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசியினருக்கு தனிப்பட்ட செல்வாக்குகள் ஏற்படக்கூடி அமைப்பு. பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றங்கள் காணப்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள் தொழில் சார்ந்த விஷயத்தில் தவறான வழிகாட்டுதல்களை செய்ய வாய்ப்புள்ளது.

கவனம்

தேவையில்லாமல் உத்தியோகம், வியாபாரத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் பெரும் நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் போன்ற விஷயத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம்

பதட்டம், படபடப்பு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சந்திரன் கிளம்புவதால் வெற்றி மேல் வெற்றி வரக்கூடிய காலகட்டம். மனக் குழப்பங்கள் நீங்கி மனம் பரிபூரணமாக தெளிவடையக் கூடிய காலகட்டம்.

பணவரவு கொட்டும்

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், பண இழப்புகள் போன்றவை எல்லாம் தீரும். சந்தோஷமாக இருக்கக்கூடிய காலகட்டம். உங்கள் ஆரோக்கியம், துணையின் கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகள் எல்லாம் தீரும். பண வரவு அற்புதமாக இருக்கும். புதிய புதிய இடங்களுக்குச் சென்று வருவீர்கள். நண்பர்கள் மூலமாக நல்லவை நடக்கும். இளைய சகோதரன், சகோதரிகள் மூலமாக நன்மைகள் நடக்கும்.

நிலம் வாங்கும் யோகம்

திரிகோணத்தில் ராகு அமர்ந்திருப்பதால் வேண்டாம் என்று சொன்னாலும் ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. விரயத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், குரு நிறைய இடமாற்றத்தைக் கொடுப்பார். புதிய நிலத்தை வாங்குவதற்கான யோகம் ஏற்படும். பள்ளிகள் அருகில் இருக்கும் நிலம், ஹவுசிங் சொசைட்டி அருகே இடம், வீடு அமைவது போன்ற யோகம் உண்டாகும்.

முன்னேற்றம்

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். டிசம்பரில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் முன்னேற்றத்தைத் தரும். மாணவ, மாணவிகளுக்கு அதிகமான உழைப்பை போடக்கூடிய காலகட்டமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு சகலவித முன்னேற்றத்தையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+