Rasi Palan This Week: இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

Rasi Palan This Week: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் எந்த 3 ராசியினருக்கு நன்மைகள் ஏற்படும், பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-which-3-zodiac-signs-will-get-good-benefits-from-april-20th-to-26

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் விருச்சிகத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் எந்த 3 ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)

விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனதில் இன்பம் ஏற்படும். சந்தோஷத்திற்குப் பஞ்சமே இருக்காது. ஆளுமை நிறைந்த மனிதர்களாக மாறுவீர்கள். எல்லோரும் உங்களை போற்றக்கூடிய அமைப்பு உள்ளது. பெண்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பொருள் கிடைக்கும் அமைப்புள்ளது. திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தை பிறப்பதற்கான யோகம் உண்டாகும். நிலம் வாங்குவோர் ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அடுத்தடுத்து சுபகாரிய அமைப்புகள் ஏற்படும். படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும்.

முன்னேற்றம்

பெரிய பொறுப்புகளுக்கு வரும் யோகம் உண்டாகும். முகவரி இல்லாதவர்கள் விசிட்டிங் கார்டு போடக்கூடிய அமைப்பு ஏற்படும். இளம் வயதை சார்ந்த விருச்சிக ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இந்த வாரத்தின் இறுதி பகுதி உங்களுக்கு சாதகமாக இருக்கும் திடீர் சந்தோஷம் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும். நிறைய பேரை சந்திக்கும் யோகம் உண்டாகும். ஆனந்தமாக இருப்பீர்கள். பெரிய பொறுப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிறிய சிறிய விஷயங்களில் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

ரத்தத்தில் பரவும் நோய், லிவர், கிட்னி செயல்பாடுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மார்பகப் பிரச்சனை, உடல் சூடு, பின்பகுதி பிரச்சனை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விருச்சிக ராசியில் இருக்கும் பெரியவர்கள் நெஞ்சக அடைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பண வரவுகள் தாரளமாக இருக்கும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதா ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேன்மையைத் தரும். முருகர் வழிபாடு செய்வது நன்மை. சுப்பிரமணிய புஜங்கத்தை தினமும் படிப்பது, கேட்பது மேன்மையைத் தரும்.

துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)

துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு, உங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். குடும்ப விஷயத்தை மட்டும் சரியாகப் பார்த்துக் கொண்டால் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அற்புதமான அமைப்பு ஏற்படும்.

தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் நல்ல காரியங்கள், சுப காரியங்கள், தானதர்மங்கள் அதிகளவில் நடக்கும். நிறைய புனித காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூர் பயணம் மேற்கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்புகள் வந்து சேரும்.

திடீர் பண வரவு எல்லா நல்ல காரியங்களும் உங்களுக்கு அடுத்தடுத்து நடக்கும். அடுத்த 4 மாதங்களுக்குள் வெளிநாடு செல்லும் அமைப்பு ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் ராகு இருப்பதால் உடம்பில் சூடு அதிகரித்து அம்மை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அரசு மற்றும் அரசு சார்ந்த தொழில், அரசாங்க உத்தியோகம், அதிகாரிகள் தொடர்பான விஷயங்களில் நன்மைகள் நடக்கும். திடீர் பண வரவுகள், எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் அமைப்பு உள்ளது.

எதற்காகவும், யாருக்காகவும் பயப்படும் தேவை இருக்காது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த அமைப்புகள் எல்லாம் பரிபூரணமாக மாறும். ஏற்றங்கள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன பாரங்கள் எல்லாம் நீங்கும். உத்தியோகத்தில் அதீதமான ஏற்றத்தைப் பெறுவீர்கள்.

செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய வாரமாக இருக்கும். அற்புதங்கள் ஏற்படும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். முதுகு தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். துர்க்கை வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தும்.

தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)

தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் பெரியோரிடம் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். விடுபட்ட தெய்வ வழிபாடுகள், குலதெய்வ வழிபாடு, உறவினர் சந்திப்புகள் நடக்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாரம். ஆண் குழந்தை, வாரிசு உருவாகக்கூடிய காலகட்டம். மனதில் சந்தோஷம் ஏற்படும். தொழில், வியாபாரம், இல்லற வாழ்க்கை அபிவிருத்தியாகும். தாயின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் உங்களுக்கு அற்புதமாக வேலை செய்யும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. அரசு வங்கிகள் மூலமாக கடன் கிடைக்கும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்கிற தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பணத்தைக் கையாளும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. நினைத்த காரியங்கள் கைகூடும். சளி தொந்தரவு அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனியில் அதிகளவு கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம்.

வழிபாடு

சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதாரம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். சந்திர மெளலீஸ்வரர் வழிபாடு மிகுந்த ஏற்றத்தைக் கொடுக்கும். செவ்வாய்க்கிழமை மதியம் தோறும் சாம்பார் சாதம், எலுமிச்சை ஊறுகாய் தானமாக கொடுப்பது ஏற்றத்தைத் தரும். குருவாயூர் வழிபாடு பெரிய அனுகூலத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+