Rasi Palan: மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 15 நாட்களில் நடக்கப்போகும் மாற்றம்.. அதிர்ஷ்டம் உண்டா?

Subscribe to Oneindia Tamil

Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்திற்கான மேஷம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

rasi-palan-what-kind-of-benefits-will-get-mesham-rishabam-rasi-people-during-december-16-to-31

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உறவுகளிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இணக்கமாகச் செல்வது நல்லது. பெற்றோர், பெரியவர்கள், ரத்த பந்த உறவுகளுடன் சிறு சிறு பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பிரச்சனைகளில் இருந்து விலகியிருப்பது நல்லது. தொழில் ரீதியாக அனுகூலமும், லாபமும், சந்தோஷமும் ஏற்படும்

மன அழுத்தங்கள் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உள்ளூர், வெளியூர், தொலைதூர பயணங்களுக்கான யோகம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த வந்த பாதிப்புகள் நீங்க அபிராமி அந்தாதியில் உள்ள பாடல்களைக் கேட்பது நல்லது. பிள்ளைகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

உங்கள் மீது தவறே இல்லையெனிலும் பிள்ளைகள் ஏதாவது குறை சொன்னாலும் அதனை கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. தெய்வீக வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, மாகன்கள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சளி, தொண்டை பாதிப்புகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ரிஷபம்

சிவன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும். கழுத்து, நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. சட்டவிரோதமான செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுடன் பழகுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், பயணங்களில் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் ஆவேசப்பட்டு பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூட இருப்பவர்கள் செய்யும் பிரச்சனைகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். யோக பலத்தை அதிகமாகப் பெறுவீர்கள். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழிலுக்கு உண்டான அமைப்பு மிகப்பெரிய ஏற்றத்தையும், நம்பிக்கையையும ஏற்படுத்தும்.

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது, வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+