மிதுன ராசிக்கு 108 நாளில் மாறும் வாழ்க்கை.. அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் குரு

Subscribe to Oneindia Tamil

மிதுனம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

rasi-palan-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-on-next-108-days

வக்கிர கிரகம்

நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.

குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசி, லக்கினக்காரர்களுக்கு 10 ஆம் இடம் தொழில் ஸ்தானத்தில் சனி வக்ரமாகி, 2 மாதத்தில் மாறுவதால் 100 சதவீதம் வெற்றிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அடுத்த 4 மாதங்களுக்கு வேலை வேலை என பிஸியாக இருப்பீர்கள். மிதுன லக்கினக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம். சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்கள், மடாதிபதிகளை சந்திக்கும் யோகம் உண்டாகும்.

பொற்காலம்

வராமல் இருந்த சான்றிதழ்கள் வந்து சேரும். நண்பர்கள் எல்லாம் மீண்டும் ஒன்று சேர்வார்கள். உங்களை மதிக்காதவர்கள் கூட இனி மதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். 4 மாதம் பொற்காலமாக இருக்கும். சனி வக்கிரமாக இருந்தால் நவம்பர் 25 க்குள் கட்டாயமாக நடக்கும். வக்கிரமாக இல்லை என்றால் நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பிறகு கட்டாயமாக நடக்கும்.

ஆற்றல்

ஒரு நிமிஷம் கூட இல்லாமல் வேகமாக செயல்படுவீர்கள். அந்த அளவுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.10 ஆம் இடம் கர்மாவிற்கான ஸ்தானமாகவும் உள்ளது. வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய கால் முட்டியில் அடிபடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பெரிய ஆற்றல், பெரிய வெற்றி கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

கடனை அடைக்கும் யோகம்

ஜாதகத்தில் முக்கியமானது சனி இருக்கும் இடம். சனி எந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறதோ அந்த சஞ்சாரம் உங்களுக்கு வேலை செய்யும். வட்டிக்கு பணம் வாங்கியிருந்தால் அதனை கட்டுவீர்கள். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வீட்டுக் கடனை அடைப்பீர்கள். பணத்திற்கு, வேலைக்குப் பஞ்சம் இருக்காது. 24 மணி நேரமும் வேலையுடன் இருப்பீர்கள்.

பண வரவு

நீங்கள் போடக்கூடிய உழைப்பு உங்களுக்குப் பணமாக மாறும் யோகம் உண்டாகும். கஷ்டப்படக் கூடிய நிலைமை அப்படியே மாறும். ஆஞ்சநேயருக்கு தேன் அபிஷேகம் கொடுப்பது நல்ல மாற்றத்தை தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். தொட்டது அனைத்தும் துலங்கும் யோகம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+