Rasi Palan: துலாம், விருச்சிகம் ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்திற்கான துலாம், விருச்சிகம் ராசிக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

rasi-palan-what-kind-of-benefits-will-get-thulam-viruchigam-rasi-people-during-december-16-to-31

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பண வரவு உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

அஷ்டமலட்சுமி கடாட்சம் உண்டாகும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு அனுகூலங்கள் காணப்படும். சனியின் தாக்கம் பெரியளவுக்கு வெற்றிகளை ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் இருக்கும் பாதிப்புகள் நீங்க அபிராமி அந்தாதி பாடல்களை கேட்பது, படிப்பது நன்மையை ஏற்படுத்தி தரும். பூர்வ புண்ணிய தோஷம் இருப்பதால் சனிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய ராகுவுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றுவது யோகத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும். சுபகாரியத்தில் இருந்த தடைகள் நீங்கும். சுப விரய பிராப்தம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் யோகம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல்களை கேட்பது, படிப்பது நன்மையை ஏற்படுத்தும்.

குழந்தைகள் விஷயத்தில் அனுகூலம், சந்தோஷம், ஏற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரையில் அதீத கவனமாக இருப்பது நல்லது. அலட்சியப்படுத்துவோருக்கு இடது பக்கம் தொடர்பான விஷயங்களில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முருகர் வழிபாடு செய்வது, சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது உங்களுக்கு ஏற்றத்தை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+