Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. ஒரு விஷயத்தில் மட்டும் ஜாக்கிரதை
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக மன அழுத்தம் வருவதக்கான வாய்ப்புள்ளது. வயிறில் கோளாறு இருந்தால் மன அழுத்தம் ஏற்படும். விட்டமின் குறைபாடு, மினரல், ஹார்மோன் குறைபாடு இருந்தாலும் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம்
உங்களின் துணை மற்றும் பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். தாய் வழி உறவுகளில் அனுகூலம் ஏற்படும். வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். யோக பலத்தை அதிகளவில் பெறும் அற்புதமான காலகட்டம். இதுவரை முடியாமல் இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் இனி டக்கு டக்கென்று நடக்கும்.
ஆரோக்கியம்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு தொடர்பான விஷயங்களில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், பெரியவர்களுடன் சிறிய வருத்தங்கள் கூட பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தும். அவர்களது ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். பெற்றோரின் பிறந்த நாளன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
தொட்ட காரியங்களில் வெற்றி
எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். நல்ல அனுகூலங்கள் காணப்படும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி பெரிய அளவில் நன்மையை கொடுக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நன்மை அதிகரிக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றிகளைக் காண்பீர்கள்.
வழிபாடு
ரிஷப ராசியினருக்கு முருகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் ஏழைகளுக்கு தானமாக வழங்குவது ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications