Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு 7 நாட்களில் வரும் அற்புத மாற்றம்.. நிதானம் ரொம்ப அவசியம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rishabam-rasi-palan-what-kind-of-benefits-that-rishabam-taurus-signs-will-get-from-october-13-to

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த அனுகூலங்ளால் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பழைய கடன்களை தீர்க்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள்.

சொத்து சேர்க்கை

இந்த காலகட்டத்தில் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் துணைக்கும் உங்களுக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். குடும்பத்திலும் அந்நியோன்யம் அதிகரிக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

போட்டி அதிகரிக்கும்

விரோதங்கள், போட்டிகள் அதிமாக இருக்கும். அனைத்தையும் சமாளிக்கும் யோகம் உண்டு. சண்டை, சச்சரவுகளால் பிரச்சனைகளாகும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்படும். கடன் கேட்டால் உடனடியாக கிடைக்கும். அடிவயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கான வாய்ப்புள்ளது. சிறிய பிரச்சனைகள் வந்தாலே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

நிதானம் அவசியம்

வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இடம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். கல்வி தொடர்பான சீட்டுகள் கிடைக்கும். கணவன், மனைவியின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

பணவரவு

பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. நோய், கடன், எதிரி ஸ்தானம் இருப்பதால் இது தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஆனாலும், அவை அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ரிஷப ராசியினருக்கு முருகர் வழிபாடு மேன்மையை ஏற்படுத்தி தரும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது, சொல்வது ஏற்றத்தை ஏற்படுத்தி தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+