Rishabam rasi palan: ரிஷப ராசிக்கு அஷ்டலட்சுமி கடாட்சம்.. திடீர் அதிர்ஷ்டம் கன்ஃபார்ம்.. பேச்சில் மட்டும் கவனம்
Chithirai matha palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து ரிஷப ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் நாளை அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசியினருக்கு உறவினர்களால் தொந்தரவு ஏற்படும். பெற்றோர் பெரியோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. அவர்களுடன் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் சதி செய்யும் அமைப்பு உள்ளது. புதிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். பெரிய அளவுக்கு அனுகூலம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இழந்த பெருமைகளை மீட்டெடுப்பீர்கள்.
தொழில்
இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று தெரிந்து கொள்வீர்கள். அஷ்டலட்சுமி கடாட்டம் கிடைக்கும். லாபங்கள் உண்டாகும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உள்ளூர் அல்லது வெளியூர் சென்று வருவீர்கள்.
யோக பலம்
துணை விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள், சுபகாரியத்தில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றங்கள் அதிகரிக்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய யோகம் உண்டு. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இணக்கமாகப் பேசுவது நன்மையை ஏற்படுத்தும்.
தொட்டது துலங்கும்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். பண வரவு நன்றாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
வழிபாடு
கடல் கடந்து மேற்கொள்ள இருந்த பயணங்கள் தள்ளிப் போனவை எல்லாம் மீண்டும் சென்று வரக்கூடிய யோகம் உண்டாகும். எல்லா விஷயங்களிலும் லாபம் ஏற்படும். மிகப்பெரிய ஏற்றங்கள் உண்டாகும். முதுகுத் தண்டுவடம், அலர்ஜி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் நன்மை ஏற்பட பெருமாள் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications