ரிஷப ராசிக்கு பேச்சினால் வரப்போகும் ஆபத்து.. சனி வக்கிரமாவதால் நன்மையா?.. தீமையா?
சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி வக்கிரம்
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

காயத்ரி மந்திரம்
சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.
சனியின் தாக்கம்
துப்புரவுப் பணியாளர்கள், உடல் சார்ந்த வேலைகளை செய்பவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். சனியின் மூலமாக வேலையில் ஏற்றம், வேலை மாற்றம், அரசியலில் செல்வாக்கு பெறுவது சனி பகவானால் தான். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் சனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சனி வக்கிரகதி அடைவதாலும், குருவின் பார்வை இருப்பதாலும் அரசாங்கம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் விமானங்கள், ரயில்கள் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி பலன்
கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது ரிஷப ராசி. உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் கர்ம ஸ்தானத்தில் கர்ம ஸ்தானதிபதி ஆட்சி பெற்றுள்ளது சிறப்பான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தூக்கம் கெடுவதற்கான வாய்ப்புள்ளது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலை மாற்றங்கள் உண்டாகும்.
சனி கர்மக்காரகன் என்பதால் தொழிலில் மாற்றம் ஏற்படும். தொழிலில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஓட்டுநர்களுக்கு சிறு சிறு உபாதைகள் வரும். ஒன்றரை மாதத்திற்கு தூக்கம் கெடுவதற்கான வாய்ப்பு, வெளிநாடுகள் தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. ராசிக்கு 12, 4 ஆம் இடத்தைப் பார்க்கிறார். தேவையற்ற செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
அலைச்சல் அதிகரிக்கும்
அதிகளவில் அலைச்சல் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். ராசிக்கு 4 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் வக்கிர சனியாக இருப்பதால் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். சுகங்கள் கெடும். தாய் சார்ந்த சிறு சிறு பிரச்சனைகள் வரும். வீடு, நிலம் வாங்குவதில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மறதி ஏற்படும்.
பேச்சைத் தவிர்ப்பது நல்லது
சனி இரண்டாவது ஒன்றரை மாதத்தில் உங்கள் ராசியிலேயே இருப்பதால் உடல்நலத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தேவையற்ற பேச்சுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாத நிலை ஏற்படும். தொழிலில் அதிக அளவில் முதலீடு வேண்டும் என்ற நிலை ஏற்படும். புதிய வேலைக்கு மாறும் வாய்ப்பு வரும்.
பண வரவு
அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. சனி வக்கிரமாகும் காலகட்டத்தில் முதல் ஒன்றரை மாதத்தில் தேவையற்ற செலவு, தூக்கிமின்மை, வெளிநாடு செல்வோருக்கு சிறிய பின்னடைவு, வேலை மாறுதல் ஏற்படும்.
வேலை மாறுதல்
அடுத்த ஒன்றரை மாதத்திற்கு வேலையில் மாறுதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அடுத்த ஒன்றரை மாதத்தில் உடல்நலனில் கவனம் தேவை. சிந்தனைகளில் பின்னடைவு, தாயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். மன அழுத்தம் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். மூன்றாவது ஒன்றரை மாதத்தில் பூரட்டாதி ஒன்றாம் பாதத்தில் இருக்கும்போது சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும் வாய்ப்புள்ளது.
வழிபாடு, பரிகாரம்
பேச்சில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. மொத்தத்தில் சனி வக்ரப் பெயர்ச்சியில் நல்ல ஏற்றத்தை தரும் காலகட்டமாக இருக்கும். காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மணிகண்டேஷ்வரர் கோயிலில் உள்ள சனி சன்னதியில் பரிகாரங்களைச் செய்து வருவது அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும். அருகில் இருக்கும் கோயில்களில் வஸ்திர தானம் செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். நல்லெண்ணெய் தானமாக கொடுப்பது நல்லது.












Click it and Unblock the Notifications