ரிஷபம் ராசிக்கு ராஜ யோகம் தரும் 4 கிரகங்கள்.. ஒரு விஷயத்துல மட்டும் உஷாரா இருங்க
பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் ரிஷபம் ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் ரிஷப ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சுக்கிரனை ராசியாதிபதியாகவும், சந்திரனை உச்சமாகவும் பெற்றுள்ளனர். மிகவும் உதவி மனப்பான்மை படைத்தவர்கள். சனி பகவான் 11 ஆம் இடத்திலும், குரு பகவான் 2 ஆம் இடத்திலும், ராகு பகவான் 10 வது இடத்திலும், கேது பகவான் 4 ஆம் இடத்திலும் இருக்கிறார்கள். சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். இது ராஜ யோகத்தை கொடுக்கும்.
தடைகள் நீங்கும்
உத்யோகம் மற்றும் தொழிலில் இருந்த தடைகள் விலகி நல்ல பலன்கள் கிடைக்கும். குரு பகவான் 2 ஆம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். காதல் உறவில் இனிமை கூடும். காதல் உறவு திருமணத்தில் நிறைவேறும். வாழ்க்கை துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட அவமானங்களால் இத்தனை காலம் துவண்டு போயிருப்பீர்கள். இப்போது மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும் புதிய உத்வேகத்தால் எதிர் நீச்சல் அடித்து முன்னேற்ற பாதைக்கு செல்வீர்கள். ராகு 10 ஆம் இடத்தில் இருந்து குரு பகவானை பார்க்கிறார். 2ஆம் இடம் தன ஸ்தானம். அதனால் பண வரவு அதிகரிக்கும். தொழிலில் லாபம் ஏற்படும்.
பொற்காலம்
தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கடன் சுமை குறையும். பழைய பாக்கி வசூலாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் பொற்காலம் இது. இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள்.
ஆதாயம்
தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு சம்பந்தப்பட்ட பயணங்கள் வெற்றி பெறும். பயணங்களால் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். பெண்களுக்கும் இந்த காலம் நன்றாக இருக்கும். பெண்கள் குடும்பம், தொழில் என்று எல்லாவற்றிலும் தடம் பதிக்கும் காலமாக இது இருக்கும். தொலைதூர தொடர்புகளால் நன்மை ஏற்படும்.
கவனம்
குடும்பத்தில் சந்தேக எண்ணத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாலினத்தவரிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இல்லாவிடின் அவமானத்தை சந்திக்க நேரிடும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வம்பு, வழக்குகளில் எச்சரிக்கை தேவை. வீடு சம்பந்தப்பட்ட முதலீடுகளிலும் கவனம் வேண்டும்.
ஆரோக்கியம்
வண்டி, வாகனத்தில் விரயம் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் எச்சரிக்கை தேவை. காரியங்களில் ரகசியம் கடைபிடிப்பது அவசியம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி, மூச்சுத்திணறல், நுரையீரல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். காளி தெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
