கும்ப ராசிக்கு அடி மேல் அடி.. திருமண விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. ரொம்ப உஷார்
பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் கும்ப ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் கும்ப ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த 5 வருடங்களாக சனி பகவானால் கலக்கத்தில் இருந்திருப்பார்கள். ராசிநாதனே சில சோதனைகளைக் கொடுத்திருப்பார். பாத சனி விலகியுள்ள நிலையில் உங்களுக்கு இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். ராசிக்கு 2 இல் பாத சனி, 7 இல் களஸ்திர ஸ்தானத்தில் கேது இருக்கிறார். ராசி மேலேயே ராகு இருக்கிறார். குரு பகவானின் பார்வை உள்ளதால் அமோகமான நன்மைகளை ஏற்படுத்துவார்.
குரு பார்வை
2 ஆம் இடம் எனும் வாக்கு, குடும்பம், தன ஸ்தானதிபதியே உங்கள் ராசியைப் பார்ப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. சனி பகவான் 2 இல் அமர்ந்து 8 ஆம் இடத்தைப் பார்க்கிறார். 4 ஆம் இடத்தையும் அதாவது சுக்கிரன் வீட்டையும் பார்க்கிறார். லாப ஸ்தானத்தையும் சனி பார்க்கிறார். ஆனால் அதே லாப ஸ்தானத்தை குருவும் பார்க்கிறார்.
திருமணம்
ராசிக்கு 2, 5, 7 இல் குரு வரும்போது திருமணம் நடக்கும் பாக்கியம் உண்டாகும். 7 இல் கேது இருப்பதால் உங்களைக் கெடுக்கும் சூழ்நிலை ஏப்படும். தவறான மனிதர்களை சரியானவர்கள் என நினைத்து மாட்டிக் கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சிக்கல்கள் ஏற்படும். திருமணம் தொடர்பான விஷயங்களில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
கவனம்
திருமண விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே திருமாணமானவர்கள் நல்ல கணவன், நல்ல மனைவி என்று நினைக்க வைக்கும். திருந்துவதுபோல அவர்கள் நடிப்பார்கள் என நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மணவாழ்க்கை தேர்வு, முடிவு, முறிவு விஷயங்களில் கவனம் தேவை
குழந்தைப் பேறு
ஆளுமை செய்பவர்களிடத்தில் அடிபணியும் சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தகுதியில்லாதவர்களிடத்தில் போலி ஆலோசனை, அறிவுரையைக் கொடுத்து கெடுக்கும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முடிவுகளை எடுக்கும்போது கவனம் தேவை. அக்டோபர் 19 முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை குரு கடகத்துக்குச் சென்று வருவதால் அந்த காலகட்டத்தில் குழந்தைப் பேறு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
பரிகாரம், வழிபாடு
ராகு ராசி மேல் அமர்ந்திருக்கிறது ஆனாலும் குரு பார்வை இருப்பதால் மகாவிஷ்ணுவை வழிபட்டு வருவது நல்லது. குருவாயூருக்குச் சென்று வருவது நல்லது. குழந்தைகள் விஷயத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications