மீன ராசிக்கு கஜகேசரி யோகத்தால் கிடைக்கும் அதிர்ஷ்டம்.. பணத்தில் நீச்சல் அடிக்கும் யோகம்.. கவனம் தேவை
பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் மீனம் ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் மீனம் ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அங்கீகாரம் கிடைக்கும் வரை போராடுவார்கள். அந்த அங்கீகாரம், உயர்வு கிடைத்த பின்னர் அதனை அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்க முடியாது. ராசியாதிபதி குரு இந்த ஆண்டு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே விரையச் சனியை சந்தித்து வந்தார்கள். நேரம், காலம், உழைப்பு போன்றவை இந்த காலகட்டத்தில் விரையமாகியிருக்கும். சம்பாதிக்க கூடிய பணம் அனைத்தும் விரையமாகிக் கொண்டே இருந்திருக்கும். சேமிப்பு என்றே ஒன்றில்லாமல் போயிருக்கும்.
மாற்றங்கள் ஏற்படும்
12 இல் இருக்கும் சனி பெயர்ச்சியாக ராசி மேல் அமர்ந்துள்ளார். இனி ராசியில் அமர்ந்து அழுத்தம் கொடுக்கும் நிலை ஏற்படும். ஜென்ம சனியாக அமர்ந்து சில நிலைகளை உங்களுக்கு உணர்த்துவார். அதே நேரத்தில், 12 இல் ராகு வருவதால் வாழ்க்கையில் தலைகீழான மாற்றங்கள் ஏற்படும் நிலை உண்டாகும். குழப்பமான மனநிலை உங்களுக்கு இருக்கும். எதிர்காலம் திட்டமிட்டபடி நடக்குமா, திட்டமிட்ட விஷயங்கள் சரியாக நடக்குமா, பல்வேறு மாற்றங்களைச் செய்தாலும் ஏமாற்றம் ஏற்படுமா என்பது போன்ற குழப்பமான நிலையே இருக்கும்.
கஜகேசரி யோகம்
ராசிநாதனாகிய குரு ராசிக்கு 4 இல் வந்து அமருவதால் கஜகேசரி யோகம் உண்டாகும். 12 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவையும் குரு பார்ப்பதால், உங்களுடைய முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும். சுகபோகங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அந்நிய மொழிகளைக் கற்றுக் கொள்ளும் யோகம் உண்டாகும். தெரியாத விஷயங்களை நுட்பமாக கற்றுக் கொள்ளும் பேராற்றல் கிடைக்கும்.
பேச்சுக்கு மதிப்பு
வாக்கு ஸ்தானத்தை ராகு பார்ப்பதால் உங்களுடைய பேச்சுக்கு, செயலுக்கு, திட்டத்து நல்ல மதிப்பு கிடைக்கும். குரு பகவானின் பார்வை ராசிக்கு 10 ஆம் இடத்தில் வருவதால் சூதுவால் சில ஏமாற்றங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். ராசிக்கு 5 ஆம் இடம் என்பது கடகம். கடகத்தில் விரைய ஸ்தானத்தில் குரு அமருவதால் போலியான அறிவுரை, நண்பர்கள், சிந்தனை, ஆன்மிகம், உறவுகள் போன்றவை உண்டாகும். இதனால், உங்களுக்கு பெரிய கலக்கம் உண்டாகும். உங்களுக்கு தவறான வழிகாட்டுதல் கிடைக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
தொழிலில் லாபம்
குரு பகை வீட்டில் இருப்பதால் வீடு, வாகனம், சொத்து, பாக்கியம், சுகம் போன்றவற்றில் சிறு தொந்தரவுகள் வரும். ஆனால், இதை எல்லாம் சமாளிக்கும் வகையில் உங்களுடைய தொழிலில் லாபம் வந்து கொண்டே இருக்கும். ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் பாதுகாப்பாக இருக்கும். சுக்கிரன் அஷ்டமாதிபதியாக வருவதால் போலியான அன்பு, காதல், உறவு, போதனைகள், சுகங்களை ஏற்படுத்துவார். முறையற்ற நட்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெயர் கெடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
கவனம்
குரு 8 ஆம் இடத்தைப் பார்ப்பதால் அவமானம், துன்பம், பழிச்சொல் எல்லாம் வராமல் பாதுகாப்பார். ராசிக்கு 6 இல் கேது இருக்கிறார். நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும்போது எதிரிகள் உருவாவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் உதவி செய்வதை நேரடியாக செய்யாமல் கையை காமித்துவிட்டு செல்வது நல்லது. தொழிலில் உங்களை நிலை நிறுத்தவதற்கான தொழிலின் உத்தி, வித்தைகளை கற்றுக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழிலில் சூழ்ச்சி உருவாகும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
யோகம்
7 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் திருமண வாழ்க்கை குறித்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி வழிபாடு செய்வது பெரிய ஏமாற்றங்களில் இருந்து விடுபடுவீர்கள். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. தொழிலில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். படிப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். முதுமையில் இருப்பவர்களுக்கு முறையான மருத்துவம் கிடைக்கும். வீடு வாங்குவது, வாகனங்கள் வாங்குவது, நகை வாங்கவது போன்ற அனைத்து யோகங்களும் கிடைக்கும்.
-
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications