30 ஆண்டுகளுக்குப் பின்.. சனி குரு ராகு கேது பெயர்ச்சியால் துலாமிற்கு பொற்காலம்.. அதிர்ஷ்டம் கொட்டும்
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெறள்ளன. இது துலாம் ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது துலாம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
துலாம்: 30 வருடங்களுக்கு ஒருமுறை தான் சனி பகவான் ஆறாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவார். இந்தமுறை சனி உங்களின் ஆறாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். ஒன்பதாம் இடத்தில் குரு பெயர்ச்சி ஆவது 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். 11 ஆம் இடத்துக்கு கேது பகவான் பெயர்ச்சி ஆகப்போகிறார். இது 18 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும்.
இந்தமுறை மூன்று அரிதான யோகமும் துலாம் ராசிக்கு உண்டாகிறது. இது மிக மிக அருமையான பலன். இது உங்கள் வாழ்வின் பொற்காலமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த அனைத்து பிரச்னைகளும் பனி போல விலகும். உங்களுக்கு தடை என்பதே இல்லை. தொட்டதெல்லாம் வெற்றியாக மாறும். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மனதுக்கு பிடித்தபடியான பணியிட மாற்றம் உண்டாகும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் சிக்கல்கள் விலகும். உங்களின் எதிரிகள், போட்டியாளர்கள் பொட்டி பாம்பாய் அடங்குவார்கள். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் அற்புதமான காலமாக இருக்கும்.
தொழிலில் நீங்களே எதிர்பாராத அளவுக்கான லாபம் நன்றாக இருக்கும். வருவாய் அதிகரிக்கும். சரியான முதலீடுகள் மூலம் சிறப்பான லாபம் இருக்கும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் மனதுக்கு பிடித்தபடி உயர்கல்வி வாய்ப்பு உருவாகும்.
சுப காரியங்கள் நிறைவேறும். திருமண தடையால் அவதிப்பட்டவர்களுக்கு இந்த காலத்தில் எதிர்பார்த்தபடி திருமணம் நடக்கும். மறு மணத்திலும் முன்னேற்றம் இருக்கும். பிரிந்த தம்பதிகள் இணைவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
கடன் சுமை குறையும். பண வரவு திருப்தியாக இருக்கும். நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசியல்வாதிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: ராகுவால் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அதனால் எதிலும் கால தாமதம் செய்யாமல் சமயோஜிதமாக செயல்பட வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் உறவிலும் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications