9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்.. துலாம் ராசிக்கு வேற லெவல் யோகம்.. குஷியோ குஷி
பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் துலாம் ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் துலாம் ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்கு சனி பகவான் 6 ஆம் இடத்திலும், குரு பகவான் 8 ஆம் இடத்திலும், ராகு பகவான் 5 வது இடத்திலும், கேது பகவான் 11 ஆம் இடத்திலும் இருக்கிறார்கள். இது அற்புதமான பலன்களை கொடுக்கும். ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்பார்கள். குரு ஒன்பதாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பது அருமையான யோகத்தை தரும்.
கை மேல் பலன்
வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கான அனைத்து கதவுகளும் திறக்கும். குடும்பம், நட்பு, உத்யோகம், தொழிலில் ஆகியவற்றில் ஏமாந்து துவண்டிருப்பீர்கள். தற்போது அதில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புவீர்கள். உங்களின் கடுமையான முயற்சிக்கு கை மேல் பலன் கிடைக்கும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
தடைகள் நீங்கும்
காரியங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி நிம்மதி, மகிழ்ச்சி பிறக்கும். சனி பகவான் ஆறாம் இடத்தில் இருப்பதால் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மனதில் தெளிவு கிடைக்கும். எதிலும் தெளிவாக திட்டமிட்டு காரியங்களை சாதிப்பீர்கள்.
லாபம் அதிகரிக்கும்
உத்யோகம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு பகவான் 6 ஆம் இடத்தில் இருப்பதால் எண்ணங்களில் உயர்வு காணப்படும். லாப ஸ்தானத்தில் கேது பகவான் இருக்கிறார். இதனால் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். சுப காரிய தடைகள் நிவர்த்தியாகும். மனதுக்கு மிகவும் பிடித்தபடியான வரன் அமைந்து திருமணம் நடைபெறும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
குழந்தை பாக்கியம்
தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். சிலர் புதிதாக அல்லது கூடுதல் தொழில் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. முதலீடுகளில் லாபம் உண்டு. கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் நன்மை கிடைக்கும். முதியோர் ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கவனம்
ராகு 6 ஆம் இடத்தில் இருப்பதால் பேராசை ஏற்படும். மனதை சற்று கட்டுப்படுத்தி முடிவு எடுங்கள். இல்லையென்றால் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. மூத்த சகோதர வழி உறவுகளால் மனக்கசப்பு ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும். ஒருமுறை ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை தரும்.












Click it and Unblock the Notifications