கடக ராசிக்கு தங்கம் தங்கமாக மாறப்போகும் வாழ்க்கை.. திடீர் அதிர்ஷ்டம், பண வரவு.. ஒரே கொண்டாட்டம்தான்

Subscribe to Oneindia Tamil

பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் கடக ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

Rasi Palan Kadagam

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் கடக ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்கு 8 இல் இருக்கும் 9 ஆம் இடத்துக்குச் சென்று சனி நிவர்த்தியாகிறார். தற்போது பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்ந்திருக்கிறார். தடைகள், வழக்குகள், வம்புகள், சண்டைகள், உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் என அனைத்தும் நீங்கும். 8 இல் ராகு பகவான் இருக்கிறார். ராசிக்கு 2 இல் கேது இருக்கிறார். ஆனாலும், ராகுவுக்கு குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

விலகிய அஷ்டம சனி

கடக ராசி சந்திரனின் அம்சம். தாயினுடைய அம்சம் பெற்ற ராசி. எவ்வளவு பாரமாக இருந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் ராசி. உங்களுக்கு அஷ்டம சனி விலகினாலும் ஒரு பாரம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் செய்த புண்ணியங்கள் உங்களை காப்பாற்றும். குரு பகவான் 12 ஆம் இடத்தில் இருந்தாலும் 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் எதிரிகள், பிரச்சனைகள் நீங்கும்.

திடீர் அதிர்ஷ்டம்

எதிரிகளிடம் உங்களை நல்லவர்கள் என்று நிரூபிப்பதை தவிர்ப்பது நல்லது. பழிச்சொல் உங்களுக்கு குறையாது. சனி 9 இல் இருப்பதால் அடுத்தவர்கள் சொல்வதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இனி உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சுக்கிரன் வீட்டை குரு பார்ப்பதால் விமோசனமான காலமாக இருக்கும்.

வெற்றி

குரு பகவான் 9 ஆம் பார்வையாக கும்பத்தை பார்க்கிறார். அவமானத்தின் உச்சத்தை அஷ்டம சனியில் அனுபவித்திருப்பார்கள். சுயமரியாதையையும், தன்மானத்தையும் இழந்திருப்பீர்கள். அவமானங்கள் எல்லாம் நீங்கும். அடுத்த ஆண்டு மே வரை குருவின் அமைப்பு உங்களுக்கு அற்புதமாக இருக்கிறது. இந்த ஆண்டுகள் நீங்கள் துணிந்து எடுக்கும் முடிவுகள், செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை உறுதியாகக் கொடுக்கும்.

திடீர் அதிர்ஷ்டம், பண வரவு

4 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும், பண வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக கொடுத்து வைத்திருந்த பணம் வட்டியும், முதலுமாக வந்து சேரும். திடீர் பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கேது 2 இல் இருப்பதால் வாக்குறுதிகளைக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் வாயால் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏதாவதொன்று பேசி அதில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

குரு பார்வை

குரு 8 ஆம் இடத்தை பார்ப்பதால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற மன நிலை உருவாகும். அடுத்தது என்ன, என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும் பொன்னான காலமாக இருக்கும். குருபுத்தி எப்போது நடக்கிறது என்று பார்த்து திருமணம் நடத்துவது நல்லது. வம்பு, வழக்கு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். சனி பகவான் நீதியை நிலைநாட்டிக் கொடுப்பார்.

படிப்பு, வேலைவாய்ப்பு

மாணவர்களின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளைப் பற்றிய கவலைகள் தேவையில்லை. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கண் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் அம்பிகையை வழிபடுவது, அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. குரு ராகு பார்வை இருப்பதால், ராகு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டீஸ்வரர், துர்கையை வழிபடுவது விமோசனத்தைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+