கன்னி ராசிக்கு விலகும் கண்டம்.. அஷ்டலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் கன்னி ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

sani-guru-rahu-ketu-peyarchi-what-kind-of-benefits-will-get-kanni-during-this-period

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் கன்னி ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 7 ஆம் இடத்தில் சனி அமர்ந்திருக்கிறார். சனி தனது பார்வை நலத்தால் நன்மை, தீமை இரண்டையும் செய்வார். ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு போகிறார். 10 இல் குரு வந்தாலும், அவருடைய பார்வை பலம் அருமையாக இருக்கிறது. கன்னி ராசிக்கு தன ஸ்தானத்தை குரு பார்க்கிறார். பணம் தொடர்பான ஏற்றத்தைப் பெறுவார்கள். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மேன்மை உண்டாகும்.

4ஆம் இடம் என்பது வீட்டை புனரமைப்பது, இடமாற்றம், வீடு மாற்றம், பழைய வீடுகளை புனரமைப்பது போன்றவற்றை செய்வீர்கள். பழைய வண்டிகளை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். இடமாற்றங்களை நோக்கிச் செல்வீர்கள். செய்யும் வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு ராசி மேல் கேது இருப்பதால் ஒரு முழுமை அடையாத நிலை இருந்திருக்கும். ஒரு குழப்பமான மன நிலை இருந்து கொண்டே இருந்திருக்கும். தொழிலை தொடங்கிவிட்டு அதில் லாபம் வருவதற்காக காத்துக் கொண்டே இருக்கும் நிலை உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் சூழ்ச்சி தொந்தரவு உண்டாகி இருக்கும். சந்திரனுடன் கேது இருப்பதால் தூக்கமின்மை, மன குழப்பங்கள், பசியின்மை, தோல் பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்து வந்திருப்பீர்கள்.

இனி இவற்றில் இருந்தெல்லாம் விடுதலை அடையப் போகிறீர்கள். ராசியை விட்டு கேது விலகி 12 ஆம் இடத்துக்கு போகிறார். ஞான மார்க்கத்தில் கேது ஈடுபட வைப்பார். கோயில் காரியம், தெய்வ வழிபாடு, அனகூல சக்திகள் போன்றவை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. மகம் நட்சத்திரம் இருக்கக்கூடிய வீட்டில் கேது போவதால் பெரிய வெற்றிகள் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது.

அஷ்டலட்சுமி யோகம்

குரு பகவான் பார்வை 6 ஆம் இடத்தைப் பார்க்கிறார். அந்த இடத்தில் ராகு பெயர்ச்சியாகி அமர்ந்திருக்கிறார். 3, 6, 9, 12 இல் சர்ப்ப கிரகங்கள் அமர்ந்திருப்பது மிகவும் நல்லது, பலம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. கன்னியில் 6 இல் ராகு அமர்ந்து குருவின் 9 ஆம் பார்வை விழுவதால் அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டம், திடீர் தன லாபம், கடன் குறைவது, கடன் குறைவதற்கான வழிவகைகள் ஏற்படுவது, அவமானங்கள் குறைவது, வட்டிக்கு மேல் வட்டி கட்டிய பிரச்சனைகள் குறைவது, நோய் நிவர்த்தி ஏற்படுவது, நோய்களுக்கான நல்ல மருத்துவ ஆலோசனை கிடைப்பது என அற்புதமான பலன்களைப் பெறப் போகிறீர்கள்.

திருமணம்

ராசிக்கு 10 இல் குரு இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். ராசிக்கு 7 இல் சனீஸ்வரன் பகவான் அமர்ந்திருக்கிறார். திருமண வயதில் பிரச்சனையாக இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உங்களிடம் இருக்கும் சாட்சியங்களையும், சம்பந்தப்பட்ட விஷயங்களையும் வைத்துக் கொள்வது நல்லது. சில வழக்கு, வம்பு, பிரச்சனைகள் இருந்தாலும் குருவின் பார்வை இருப்பதால் அதில் இருந்து தப்பிக்கும் வாய்ப்புள்ளது.

தொழில்

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆர்வம் தூண்டப்படும். கேது விலகுவதால் மனது தெளிவாகும். ராசியை சனி பார்ப்பதால் அடிமைத் தொழிலில் இருந்து விலகி சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். கடனிலிருந்து வெளியில் வருவீர்கள். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைப்பீர்கள். எங்கு தொழில் தொடங்கினாலும் அதில் லாபம் வருமா, வராதா என யோசித்து, தங்கள் சுய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு தொடங்குவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+