Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி பலன் 2025: இந்த 5 ராசிக்காரர்களுக்கு யோகம்தான்.. அள்ளிக் கொடுக்க போறாரு சனி பகவான்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025 பலன்: 2025 புத்தாண்டு பிறக்க சரியாக இன்னும் ஒருமாத காலம்தான் உள்ளது. வரும் புத்தாண்டில் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகிறார் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் ஐந்து ராசிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் யோக பலன்களை கொடுக்கப் போகிறார், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க... (Sani Peyarchi 2025 Palan)

வரும் 2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடையவுள்ளார். சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்வார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்கையில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சனி திசை, ஏழரை சனி போன்றவை தொடங்கும்.

sanipeyarchi astrology

இந்த சனிப்பெயர்ச்சியால் இதுவரை வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களையும், துன்பங்களையும், செழிப்பான வாழ்வு இல்லாமலும் தவித்து வந்தவர்களுக்கு பல்வேறு நல்ல பலன்களை கொடுத்து ஏற்றம் அடையச் செய்யவுள்ளார் சனி பகவான். சில ராசிக்காரர்களுக்கு சனி திசை தொடங்கும், ஏழரை சனி ஆரம்பமாகும், அல்லது ஏழரை சனியில் அடுத்த இரண்டரை ஆண்டுகள் தொடங்கும்.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் சனி பகவான் பெயர்ச்சி ஆவதால் மகரம், விருச்சிகம், துலாம், கடகம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கடக ராசிக்காரர்களுக்கு கவலையே வேண்டாம்: 2025 புத்தாண்டு கடக ராசிக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும் ஆண்டாக அமையும். அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டு வந்த உங்களின் ராசிக்கு 9 ஆவது வீட்டில் சனி வருவதால் அனைத்து பாதிப்புகளும் நீங்கும். முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொட்டது துலங்கும். உத்தியோகத்தில் அனுகூலம் உண்டாகும்.

வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல வேலை தொடர்பான செய்திகள் வந்து சேரும். திருமணம், குழந்தைப் பேறு, வேலைவாய்ப்பு, தொழில் விருக்தி போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய கனவுகளை நிறைவேற்றுவதற்கான அனைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை உத்வேகத்துடன் மேற்கொள்வீர்கள். மொத்தத்தில் புத்தாண்டு உங்கள் வாழ்வை புதுமையாக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம்: ரிஷப ராசிக்கு லாப ஸ்தானத்துக்கு வருகிறார். அதனால், பூர்வ கர்மா உங்களுக்கு கைகொடுக்கும். நல்ல சாதகமான நிலையில் சனி பகவான் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இருப்பதால் அனைத்து நன்மைகளும், நற்பலன்களும் உண்டாகும். தொழில் வளர்ச்சி, லாபம், தந்தை சொத்துகள், பூர்வீக சொத்துகளில் அனுகூலம் உண்டாகும். வெளியூர் பயணங்கள், உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகல் ஏற்படும்.

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வேலையில் ஸ்டிரெஸ்ஸாக இருந்தவர்களுக்கு இனிமேல் அதிலிருந்து விடுதலை உண்டாகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு இருக்கும். நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள்.

மகரம் ராசிக்கு ஜாக்பாட்: மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி விலகப் போகிறது. சனி ஆட்சி பெற்றவர்கள் மகர ராசிக்காரர்கள். ஏழரை சனி நடந்து வந்தாலும் பல்வேறு நன்மைகளையும் சனி பகவான் கட்டாயம் கொடுத்திருப்பார். ஏழரையால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு 2025 ஆம் ஆண்டில் நல்ல பலன்களை சனி பகவான் கொடுக்கப் போகிறார். இனி உங்களுக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.

தொட்டது துலங்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். வளர்ச்சிப் பாதையை நோக்கி வேகமாக முன்னேறுவீர்கள். புதிய வீட்டுக்கு மாறும் யோகம் உண்டு. வர வேண்டிய பணம் வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வங்கிக் கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். மனக் குறைகள், பாரங்கள் குறையும். குடும்பத்தில் குழப்பங்கள், பயங்கள் நேரும். மகத்தான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

துலாம் ராசிக்கு எல்லாமே சாதகம்: துலாம் ராசிக்கு 2025 ஆம் ஆண்டு ஜாக்பாட்தான். பெரிய அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வீட்டில் அனைத்து விதமான நல்ல காரியங்களும் நடக்கும். அடுத்த இரண்டரை ஆண்டுகள் வேலை, கடன், தொழில் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும். கடன்கள் தீரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

அனைத்துப் பொருளாதார பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல வேலை, நல்ல தொழில், நல்ல வியாபாரம் அமையும். பொருளாதார பிரச்சனை இனி உங்களுக்கு இருக்காது. உங்களுடைய திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வேலைக்காரர்களால் ஏற்பட்டு வந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும். அடுத்த இரண்டரை வருடம் அருமையாக இருக்கும்.

விருச்சிகம் ராசிக்கு பொருளாதாரம் சீராகும்: சனிப்பெயர்ச்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும் ராசிகளில் விருச்சிகமும் ஒன்று. சாதிக்கப் பிறந்த விருச்சிகக்காரர்கள். கடந்த இரண்டரை காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு, கடன்பட்டு வந்தவர்கள் எல்லாம் 4 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் எதிரிகள் உதிரியாகக் கூடிய ஆண்டாக அமையும். பொருளாதார பிரச்னைகள் சீராகும்.

குடும்பத்தில் பிரச்னை, நிம்மதியின்மை, காதல் தோல்வி என சொல்ல முடியாத பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள். அர்த்தாஷ்டம சனி முடிவதால் அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு நல்ல சுப பலன்களைக் கொடுக்கும். வியாபாரம், தொழில், வியாபராத்தில் அனுகூலம் உண்டாகும். முன்னேற்றப் பாதை உண்டாகும். புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+