கோடிகளைக் குவிக்கும் யோகம்.. சிகரத்தில் ஏறப்போகும் மகரம்.. இனி எல்லாமே குட் நியூஸ் தான்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இன்று (மார்ச் 29 ஆம் தேதி) சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கும் ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

sani-peyarchi-2025-magaram-rasi-people-will-get-huge-success-in-life-during-this-saturn-transit

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மகர ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு சிகரத்தை தொடக்கூடிய யோகம் உண்டாகும். 3 ஆம் இடத்தில் இருக்கும் சனி தைரிய, வீரிய, உபஜெயஸ்தானம் ஆகும். வெற்றியை பெறக்கூடிய மன வலிமை உங்களுக்கு உண்டாகும். அனைத்து விஷயங்களையும் சாதிக்கக் கூடிய மன தைரியத்தைப் பெறுவீர்கள். ஏஐ, கம்யூனிகேசன், சிஸ்டம், ஐடி, ஏஐ இன்ஜினியர்ஸ் போன்ற படிப்புகளைப் படிப்பது, முதலீடு செய்வது போன்ற விஷயங்களை செய்வீர்கள். வெளியூர் வெளிநாடு சென்று படிக்கும் யோகம், வசிக்கும் யோகம் உண்டாகும்.

வீடு, நிலம் விற்கும் யோகம்

யாருக்கெல்லாம் 9,3 ஆம் இடம் வலிமையாக உள்ளதோ அவர்கள் வேறு ஊருக்குச் சென்றுதான் வெற்றி பெற்றிருப்பார்கள். யோக போகத்தைக் கொடுக்கும் காலகட்டாக இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருப்பார்கள். இதுவரை மனதில் இருந்து வந்த பாரங்கள் அனைத்தும் தீரும். ஊர் மாற்றம் ஏற்படும். 3 ஆம் இடத்துக்கு சனி வரும்போது தான் வீடு, நிலம் விற்கும் பிராப்தம் உண்டாகும்.

திருமண யோகம்

சகேதர, சகோதரிகளுக்கு திருமண யோகம் உண்டாகும். தொண்டை, கழுத்து பிரச்சனைகள் குணமாகும். படிப்பில் மந்தமாக இருந்தவர்களுக்கு நல்ல ஆசிரியர் கிடைப்பார்கள். கடனை அடைக்கக் கூடிய வலிமை உண்டாகும். வீட்டில் இடதுபுறம் இருக்கும் ஆஞ்சநேயரை சன்னிதானத்தில் வழிபாடு செய்வது நன்மையைத் தரும். குறிப்பாக வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.

பணவரவு

ஆன்லைன் மேட்ரிமோனியில் திருமண வரன் கிடைக்கும். எதிர்பார்ப்பதை விட நல்ல அமோகமான விஷயங்கள் உங்களுக்கு நடக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்

பெயர் கெடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களை திருப்திப்படுத்தாத சூழ்நிலை உண்டாகும். மனதில் ஏதாவது ஒரு தடை, குழப்பம் வந்து கொண்டே இருக்கும். அப்போது இடத்தை மாற்றுவது நல்லது. தினந்தோறும் நடைப்பயிற்சி செய்வது மனதில் புத்துணர்ச்சி உண்டாக்கும். மனதில் இருக்கும் அதீத சிந்தனைகள் விலகும்.

பரிகாரம், வழிபாடு

வீட்டுக்கு இடதுபுறம் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது நல்ல பலன்களைத் தரும்.

மதிப்பெண்

மகிழ்ச்சியின் அடிப்படையில் 100க்கு 85 சதவீதம், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 100க்கு 90 சதவீதம் சிறப்பாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+