சனிப்பெயர்ச்சி 2025: விருச்சிகத்துக்கு வீடு வாங்கும் யோகம்.. ஆனா தேடி வரும் பிரச்சனை.. அசந்தா போச்சு
சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், விருச்சிக ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியானது எல்லாவற்றிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டாமாக இருக்கும். எல்லா கிரகங்களுமே நமக்கு சாதகமாக இருக்கிறது. எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் என்று நினைக்க கூடாது. குரு பகவான் 7 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்துக்குப் போகிறார். சனி பகவான் 4 இல் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகிறார். ராகு பகவான் 5 இல் இருந்து கும்ப ராசிக்கு 4 ஆம் இடத்துக்குப் போகிறார்.
நண்பர்களாலும், புதிதாக நமக்கு கிடைக்கக்கூடிய நட்புகளாலும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சனி பகவான் 5 ஆம் இடத்துக்கு போகும்போது நம்முடைய பூர்வபுண்ணியம் எப்படி உள்ளது என்பது முக்கியம். நிறைய பாவங்கள் செய்திருந்தால் 5 ஆம் இடத்துக்கு போகக்கூடிய சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய குரு பகவானால் தண்டனையை கொடுப்பார். கேது 10 இடத்துக்குப் போகிறார்.
கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கவனமாக இருக்க வேண்டும். விடுதியில் படிக்கும் மாணவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கேது பகவானின் மாற்றம் வேலை மாற்றத்தை உண்டாக்கித் தரும். சம்பளம் வருகிறதென்று வேலையை மாற்ற வேண்டாம். அது தப்பான முடிவாக மாறக்கூடும். உங்களுடைய ஜாதகத்தில் எந்தவிதமான தசா நடக்கிறது என்று பார்த்துக் கொள்வது நல்லது. ஜாதகத்தில் 10 இல் கேது ராகு இருந்தால் இந்த முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
கடன் வாங்கி வீடு வாங்கலாம். வங்கிக் கடன் வாங்கலாம். மற்றவர்களுக்கு கடன் வாங்கித் தருவது, ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பெண்கள் மனோ ரீதியான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்து. விசாக நட்சத்திரக்காரர்களுக்கு மன ரீதியான குழப்பம், அச்ச உணர்வு ஏற்படும். சமையலறையில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் யாரையும் நம்பி ஒரு இடத்துக்குப் போவது, கையெழுத்து போடுவது கூடாது. தெரிந்தவர்கள் மூலம் வரும் வேலைவாய்ப்பு, கடன்களை பெறலாம். தெரியாதவர்களை நம்பக் கூடாது. உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏமாறாமல் இருப்பது நல்லது. புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கேட்டை நட்சத்திரக்காரர்கள் நண்பர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கடனைத் தவிர்ப்பது நல்லது. வேலை பறிபோவதற்கான வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருக்கிற வேலையை தக்கவைத்துக் கொள்வது நல்லது. புதிய கடன்களில் எச்சரிக்கை தேவை.
தசா காலங்கள் நன்றாக இருந்தால் வேலை, வியாபாரங்களில் விஸ்தரிப்பு செய்யாமல் இருப்பது நல்லது. 2026 மே மாதத்துக்குப் பிறகு குரு 9 ஆம் இடத்தில் இருக்கும்போது நல்ல பலன்களைத் தரும். புதிய வேலைவாய்ப்புகள், புதிய விஷயங்களை சனி பகவான் அள்ளிக் கொடுப்பார். இந்த ஒரு வருடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருக்கிற விஷயத்தை வைத்துக் கொண்டு அமைதியாக இருப்பது நல்லது.
ராகு கேது ஆசைகாட்டி மோசம் செய்வதற்கான வாய்ப்புள்ளது. புதிய வியாபாரம், வேலை, புதிய முயற்சிகளை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. பெண்கள் தேவையில்லாத பய உணர்வோடு இருப்பார்கள். ஒவ்வொரு பெளர்ணமி தோறும் பச்சரிசி தானம் செய்யலாம், குளங்களில் மீன்களுக்கு பொறி கொடுக்கலாம்.
விருச்சிக ராசியினர் அவசியமாக ஸ்ரீவாஞ்சியம் சென்று ஈசனை வழிபடலாம். சிருங்கேரி சென்று துங்கபத்ரா நதியில் உள்ள மீன்களுக்கு பொறியிட்டு, சிவனை வழிபடுவது நல்லது. இந்த பரிகாரங்களைச் செய்தால் சனி பகவான் அருள் மழையைப் பொழிவார். அருகில் இருக்கும் சிவபெருமான் ஆலயங்களில் திங்கள்கிழமை தோறும் வில்வ அர்ச்சனை செய்வது நல்ல பலன்களைத் தரும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications