சனிப்பெயர்ச்சி 2025: ஏழரை சனியால் மேஷ ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம்.. அள்ளிக் கொடுப்பார் சனி பகவான்
சனிப்பெயர்ச்சி 2025: சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசிக்கு இடம்பெயரவுள்ளார். சனிப்பெயர்ச்சியானது ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் புத்தாண்டு சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க... (Elarai sani for mesham)
நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப நற்பலன்களை அள்ளிக் கொடுப்பவர் சனி பகவான். ஒன்பது கிரகங்களில் சனி பகவான் மட்டுமே ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் சிறப்பு வாய்ந்த கிரகமாகும். சனிப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.

ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சனி பெயர்ச்சி அடையும்போது சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி, சனி திசை தொடங்குவது வழக்கம். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதியன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
ஏழரை நாட்டு சனி என்பது விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என மொத்தம் ஏழரை ஆண்டுகளுக்கு நடக்கும். விரைய சனி என்பது முதல் இரண்டரை ஆண்டுகள் நடக்கும், விரைய சனி அதற்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள் நடக்கும், ஜென்ம சனி அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகள் இந்த ஏழரை நாட்டு சனி என்பது நீடிக்கும்.
சொந்த ராசிக்கு முந்தைய ராசியில் சனி பகவான் இடம்பெயரும்போது விரைய சனி காலம் நடக்கும். அதற்கு அடுத்த இரண்டரை காலம் ஜென்ம சனி. அதாவது சொந்த ராசிக்கே சனி பகவான் இடம்பெயர்வார். அடுத்த இரண்டரை காலம் சொந்த ராசியின் அடுத்த ராசியில் சஞ்சரிப்பார் அதுதான் பாதசனி. இவ்வாறு ஏழரை சனி ஏழரை ஆண்டுகாலம் நீடிக்கும்.
பொதுவாக சனி என்றாலே பலரும் பயப்படுகின்றனர். அவ்வாறு பயப்பட தேவையில்லை. சனி உச்சத்தில் இருப்பவர்களுக்கு சனிபகவான் பல்வேறு நற்பலன்கள் மற்றும் செல்வங்களை கிடைக்கச் செய்வார். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். கும்ப ராசிக்கு அதிபதியாக திகழ்கிறார் சனி பகவான். தற்போது தனது சொந்த ராசியில் பயணித்து வரும் சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசிக்கு இடம்பெயரவுள்ளார்.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு (Elarai sani for mesham)சனிப்பெயர்ச்சி எவ்வாறு உள்ளது, என்னென்ன நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை பார்க்கலாம் வாங்க...
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு விரைய சனி தொடங்கவுள்ளது. அதாவது சனி பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. தொழில், வியாபாரம், சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொட்டது துலங்கும். நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஏழரை சனியில் தொடக்கம் என்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும். எதிர்கால பிரச்னைகளுக்கு இந்த காலகட்டத்திலேயே தயாராகிக் கொள்ள வேண்டும்.
பாதம், முதுகு, கழுத்து, பாத வலி ஏற்படும். உடற்பயிற்சி மிகவும் முக்கியம். பிள்ளையாரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். தேக ஆரோக்கியத்தில் மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் எந்தவொரு குறையும் இருக்காது.
எதாவது ஒரு மன அழுத்தத்துடன், யோசனையுடனேயே இருப்பீர்கள். எல்லாமே இருந்தாலும் பயத்துடனேயே இருப்பீர்கள். எந்த ஒரு குறையும் இருக்காது மகிழ்ச்சியாக இருக்கலாம். பெரிய நட்பு வட்டாரத்தை வைத்து இருப்பீர்கள். கடைசி 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்துவிட்டீர்கள். இந்த ஆண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள். பிள்ளையார் பட்டி, திருச்செந்தூர் குரு வழிபாடு செய்வது அனுகூலத்தை உண்டாக்கும்
பாசிட்டிவான எண்ணங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களைத் தருவார். தான தர்மம் கொடுப்பதால் சனி பகவான் நல்ல பலன்களை அள்ளித் தருவார். இது எதிர்மறையான செயல்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்க உதவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications