சனிப்பெயர்ச்சி: கன்னி ராசிக்கு கண்ட சனி.. கவனம் கவனம்.. முழு விவரம் இதோ
சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கண்ட சனிஎப்படி இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
நம்முடைய ஜாதகத்தில் 4 வீட்டை சனி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சனி ஒரு வீட்டில் இருக்கும் அந்த வீட்டு பலன்கள் சனி பகவானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 3, 7, 10 பார்வைகள் மூலமாக இன்னொரு 3 வீட்டை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த இரண்டரை காலம் சனிப்பெயர்ச்சியின் தாக்கமே அதிகளவில் இருக்கும்
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கண்ட சனியால் கன்னி ராசியினருக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசிக்கு சனி பகவான் இதுநாள் வரை ஆறாம் இடத்தில் இருந்தது. அது நல்ல அமைப்பாக இருந்தாலும் கடந்த ஒன்றரை வருடமாக ராசியில் கேது பகவான் அமர்ந்து ஏராளமான பிரச்னைகளை கொடுத்திருப்பார். உடல் ஆரோக்கியத்திலும் ஏராளமான பிரச்னைகளை கொடுத்திருக்கும். தொழிலிலும் நிறைய பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள்.
தற்போது சனி ஏழாம் இடத்துக்கு கண்ட சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். இது நல்ல அமைப்பு இல்லை என்றாலும் மற்ற ராசியினரை போல கன்னி ராசிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. காரணம் உங்கள் ராசி அதிபதியான புதன் பகவானுக்கு சனி நட்பு கிரகம். சனி பகவான் உள்ளே சென்று ராகு வெளியே செல்கிறார்.
ராசியில் இருந்து கேது பகவானும் பெயர்ச்சி ஆகிறார். பணி மாற்றத்துக்கு காத்திருப்போருக்கு அதற்குண்டான பலன் கிடைக்கும். வெளிநாடு முயற்சியில் சாதகமான முடிவு கிடைக்கும். குரு பகவான் ஆறாம் இடத்தில் இருப்பதால் நன்மைகளை உண்டாகும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
சனி ஏழாம் இடத்துக்கு வருவதால் சின்ன சின்ன ஏமாற்றங்கள் வந்து செல்லும். நிலம் பத்திரப்பதிவு விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் கல்வி, திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக முடிவு எடுக்க வேண்டும். கடன் விவகாரத்திலும் சூதானமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் வந்து செல்லும். எந்த காரியத்திலும் அலட்சியமாக.. தாமதம் செய்ய கூடாது. பூர்விக சொத்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் மாற்றம் செய்ய வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும். ஓய்வு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
திருநல்லாறு சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட உதவிகளை செய்வதால் நன்மை பிறக்கும். காகம் மற்றும் பைரவருக்கு உணவு ப டைப்பதாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications