சனிப்பெயர்ச்சி: தனுசு ராசிக்கு நாய்க்கடி கட்டாயம்.. இழந்தவை மீண்டும் கிடைக்கும் யோகம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். தனுசு ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு: தனுசு ராசியினருக்கு ராசிக்கு 3 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 4 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். ராகு விலகுவதால் அம்மாவின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். 4 ஆம் இடத்தில் சனி இருக்கும்போது கல்வியில் தடை ஏற்படும். ஆரோக்கியத்தில் கடுமையாக பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும்.
வீடு மாறக்கூடிய சூழல் உண்டாகும். வீடு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடக்கூடிய பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. அம்மா, அப்பா வகையில் தாத்தா, பாட்டிகளுக்கு கர்மா செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். அவர்கள் மீது மிகுந்த அன்புடன் இருப்பது நல்லது.
4 ஆம் இடத்தில் சனி இருப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும்போது திடீர் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வீடு கட்டுமானப் பணி இந்த காலகட்டத்தில் ஆரம்பித்தால் கடும் செலவுகள் ஏற்படும். வீட்டை நம்பி கடன் வாங்கினால் நிம்மதியை இழந்து விடுவீர்கள். கையில் பண இருப்பை வைத்துக் கொண்டு 70 சதவீத பணத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டுவதில் இறங்குவது நல்லது.
புதிதாக விவசாயத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. போர் போட்டால் தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். வரும் பணத்தில் நிலத்தை வாங்கி போடுவது நல்லது. கண்டிப்பாக விலை ஏறும். திடீர் விருதுகள், அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புள் உண்டாகும்.
நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வெள்ளி விழா கொண்டாடும் படங்கள் வந்து சேரும். வெற்றி படங்கள் அமையும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் வந்து சேரும். தொலைந்த பொருள் உங்களுக்கு கிடைக்கும். பிரிந்த நண்பர்கள் மீண்டும் சேருவார்கள்.
இழந்த பதவிகள் கிடைக்கும். இழந்த பொருளும் கிடைக்கும் யோகம் உண்டாகும். விலங்குகள் மூலம் அவஸ்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. விஷக் கடிகள் உண்டாகும். நாய்க் கடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. பூனை குறுக்கே வருவது, நாய் வருவது, விலங்குகளால் இடையூறு ஏற்படுவது போன்ற நிலை ஏற்படும். தனுசு ராசிக்காரர்கள் வாகன விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications