சனிப்பெயர்ச்சி: மீனம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. பேச்சில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

Sani peyarchi Meenam

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மீனம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்: மீனம் ராசியைப் பொருத்தவரை உங்கள் ராசிக்கு சனி பகவான் வருகிறார், ஜென்ம சனி. எந்த வேலைகளைச் செய்தாலும் மிகவும் மெதுவாக செய்யத் தொடங்குவீர்கள். தொழிலில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரம், வேலையில் வழக்கமாக வேகம் தடைபடும். உடல்நிலையில் அதிகளவில் பாதிப்பு ஏற்படும். உடல் எடை குறையும். தோலில் சுருக்கங்கள் மற்றும் முடி வெள்ளையாகும்.

தற்பெருமை பேசுவதை தவிர்ப்பது நல்லது. ராசியில் இருக்கும்போது தற்பெருமை பேசினால் வாய்ப்பை இழக்க நேரிடும். மதுப் பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் உண்டு. பங்குச் சந்தை, டிரேடிங் போன்றவற்றில் ஈடுபட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதன் மூலம் கவலைகள் ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் மூலமாக சிறிய சிறிய அவமானங்கள் ஏற்படும். கண் பிரச்சனை ஏற்படும்.

நினைவாற்றல் குறைவதற்கான வாய்ப்புள்ளது. கண்ணியம் குறையும். பகை உண்டாகும். அமைதி, தூக்கம் கெடும். அடுத்த இரண்டரை ஆண்டுகள் வேலை நிரந்தரமாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்காது. குறையவும் செய்யாது. வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்குவது, கட்டுவது போன்றவற்றை செய்தால் நல்லபடியாக போகும். வீடு வாங்கும் யோகம் உள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. நல்லெண்ணெயை தினந்தோறும் ஆயில் புல்லிங் செய்வது நல்லது.

சின்ன சின்ன குழப்பங்கள் மனதில் வந்து போகும். பேசக்கூடிய பேச்சு, செய்யக்கூடிய செயல்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அமைதியாக இருப்பது நல்லது. அறிவுரை கூறுவது கூட தவறான புரிதலை உண்டாக்கும். சனி பகவானை வழிபடுவது, ஏழை எளியவர்களுக்கு தானம் அளிப்பது நல்ல பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+