சனிப்பெயர்ச்சி: மகரம் ராசிக்கு ஒவ்வொரு பாலும் சிக்ஸர்.. அட்டகாசமான யோகம்!

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

Sani peyarchi Makaram

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மகரம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்: மகரம் ராசிக்கு உங்களின் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகப்போகிறார். ஏழரை சனி முடிவதால் கடந்த கால பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும். அலைச்சல் குறையும். தொழில் விருத்தியாகும். நகை உள்ளிட்ட ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உள்ளது. கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. சொந்த வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. வெளியூர், வெளி மாநிலப் பயணங்களில் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்வதற்கான யோகமும் கிடைக்கும். இறங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளால் லாபம் உண்டாகும்.

சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்,பி உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்விலும் வெற்றி பெற்று அரசுப் பணி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். தொழிலில் திறன்மிகுந்த ஊழியர்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்குண்டான உரிய அங்கீகாரம் கிடைக்கும். மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள்.

பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். கடன் சுமை குறையும். உத்யோகத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி மாற்றத்துக்கான முயற்சி செய்வோருக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறும். திருமணம் நடைபெறாமல் இருப்போருக்கு இந்த காலத்தில் திருமணம் நடைபெறும்.

வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும். மன படபடப்பு நீங்கும். உத்யோகத்தில் பதவி, சம்பளம் உயர்வு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். புகழ் பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு செல்வாக்கு கூடும். உறவுகளிடையே இருந்த மனகசப்புகள் நீங்கி வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். அக்கம், பக்கம் வீட்டாருடன் மோதல் வந்து செல்லும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை இருப்பவர்கள் மருத்துவ பரிசோதனையை இடைவிடாமல் மேற்கொள்வது நல்லது. பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண் - பெண் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுப காரியங்கள் செய்யும்போது மிகவும் கவனமாக முடிவு எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+