Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2022..ராஜ்ஜியம் ஆளும் யோகம்..தை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 2023ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தை பொங்கல் முடிந்த பிறகு திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்கிறது. மார்ச் 29ஆம் தேதி வாங்கிய பஞ்சாங்கப்படியும் சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. பல கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் சனி பகவான் கொடுக்கும் தண்டனைகள் எல்லாமே ஒரு படிப்பினையை கொடுக்கத்தான். நிறைய சோதனைகளை கொடுப்பது நல்ல வழிக்கு திருப்பதான். சனிபகவான் நீதிமான் தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிப்பார். நம்முடைய வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

சனி பகவான் இந்த சனி பெயர்ச்சி காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு மிக பிரம்மாண்ட ராஜ யோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தொழில் வருமான காரகன். கர்ம காரகன். கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் சனிபகவான் கோடீஸ்வர யோகத்தையும் ராஜ்ஜியத்தை ஆளக்கூடிய யோகத்தையும் தரப்போகிறார். யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே.. சனி பகவானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கப்போகிறது. அள்ளித்தரப்போகிறார் சனிபகவான். இரண்டரை ஆண்டுகள் உங்கள் காட்டில் பணமழை பொழியப்போகிறது. நீங்கதான் இனி ராஜா. மேஷ ராசிக்கு 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார் சனிபகவான். லாப ஸ்தானம். உங்களுடைய முதலீடுகள் எல்லாம் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறார். ஏதோ ஒரு வகையில் பணம் தேடி வரும். இடம் வாங்குவீர்கள். வீடு வாங்குவீர்கள். பிரபலமானவராக மாறப்போகிறீர்கள். உங்களுக்கு பழைய கடன் அடையும். வீடு கட்டுவதற்கும் நிலம் வாங்குவதற்கும் எதிர்பார்த்த கடன் வந்து சேரும். பலருக்கும் உதவி செய்யும் அளவிற்கு பணம் தேடி வரும்.

சனிபகவான் வழிபாடு

சனிபகவான் வழிபாடு

அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எப்போதோ செய்த முதலீடுகள் உங்களுக்கு அதிக லாபத்தை தரப்போகிறது. சனிபகவானை திருநள்ளாறு சென்று பார்த்து தரிசனம் செய்து விட்டு வந்து விடுங்கள். சனிபகவானுக்கு அபிஷேகம் செய்து கறுப்பு வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலர்கள் வைத்து எள் சாதம், மிளகு வடை சாற்றி வழிபடுங்கள். சிலருக்கு அன்னதானம் செய்யுங்கள். சிவ ஆலயங்களில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள். பாலபிஷேம் செய்து வழிபடுங்கள்.

மிதுனம்

மிதுனம்

ஆட்டிப்படைத்த அஷ்டமத்து சனிபகவான் உங்களை விட்டு விலகப்போகிறார். பொருளாதாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கி மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கஷ்ட காலம் நீங்கப்போகிறது. திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் சனிபகவானால் தெய்வ பலம் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி விட்டு தர்பாரண்யேஸ்வரருக்கு வில்வ அர்ச்சனை செய்து சனிபகவானை தரிசனம் செய்து விட்டு வருவது நன்மையைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டில் இருந்து கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

கன்னி ராசி

கன்னி ராசி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இனி 2023ஆம் ஆண்டில் இருந்து ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். உங்களுக்கு இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கும். தடைபட்டிருந்த காரியங்கள் படிப்படியாக நீங்குவதற்கான அறிகுறிகள் இப்போதே உங்களுக்கு தென்படும். நீங்கள் மிகப்பெரிய யோகாதிபதியாக மாறப்போகிறீர்கள்.

பணம் வீடு தேடி வரும்

பணம் வீடு தேடி வரும்

கடன் பிரச்சினைகள் நீங்குவதற்கான காலம் கைகூடி வந்துள்ளது. கொடுத்த கடன்கள் வசூலாகும். உங்களை கடன் பிரச்சினையில் சிக்க வைத்தவர்கள் அதற்காக வருந்தி பணத்தை வீடு தேடி வந்து கொடுத்து விட்டு செல்வார்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். அடகு வைத்த நகையை மீட்பீர்கள். பெண்கள் இந்த ஆண்டு நிறைய நகை வாங்குவீர்கள். அரசியவாதிகளுக்கு பதவியும் புகழும் தேடி வரும். சனிபகவான் உங்களுக்கு அள்ளித்தரப்போகிறார். வரப்போகும் யோகத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு சனிபகவான் செல்வதால் யோகமும் ஞானமும் தேடி வரப்போகிறது. கடந்த ஏழரை ஆண்டு காலமாக உங்களை ஆட்டிப்படைத்த சனிபகவான் உங்களை விட்டு விலகப்போகிறார். பட்ட கஷ்டங்கள்.. அவமானங்கள் எல்லாம் நீங்கப்போகின்றன. உங்களுக்கு இனி எல்லாம் ஜெயமே...இதற்காகத்தான் காத்திருந்தீர்கள். நமக்கு விடிவு காலம் எப்போது என்று காத்திருந்த தனுசு ராசிக்காரர்களுக்கு விடியல் பிறக்கப்போகிறது. நினைத்தது நிறைவேறப்போகிறது. திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கப்போகிறது. உங்களை விட்டு விலகப்போகும் சனிபகவானுக்கு நன்றி சொல்லுங்கள். நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள் கருங்குவளை மலர்கள் சாற்றி சனிபகவானை வழிபடுங்கள். இதுநாள் வரை உங்களை சங்கடப்படுத்திய சனிபகவான் இனி அள்ளித்தரப்போகிறார். அனுபவிக்கத் தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+