Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 6 ராசிகள்?.. என்ன பரிகாரங்கள் செய்யலாம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29 ஆம் தேதி, இன்று இரவு 11 மணியளவில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவானின் பிடியில் எந்த ராசியினர் சிக்கப் போகின்றனர், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்ன பரிகாரம் செய்யலாம் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி இரவு 11 மணியளவில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். சனி கிரகத்தின் இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட சில ராசிகள் சனியால் பாதிப்புகளைச் சந்திப்பார்கள். எந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை, பரிகாரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

sani-peyarchi-some-zodiac-signs-will-be-affected-by-saturn-during-the-transit-lets-see-what-matte

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனி விரைய சனியாக தொடங்குகிறது. அமோகமான காலகட்டமாக இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. எந்த காரியங்களைச் செய்தாலும் அதனை திட்டமிட்டுச் செய்வது நல்ல பலன்களைத் தரும். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைகளால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். திறமைகளை வெளிக்காட்டும் நேரமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கழுத்து, தலை, முகத்தில் உள்ள உறுப்புகளில் சிறு சிறு பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.

பரிகாரம் - இரண்டரை ஆண்டு காலத்துக்கும் முருகன் கோயில்களுக்குச் சென்று முருகனை தரிசிப்பது, அபிஷேகங்களை கண் குளிர காண்பது நல்ல பலன்களைத் தரும். திருவெண்காடு புதன் கோயிலுக்குச் செல்வது நல்லது.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனி காலகட்டம் என்பதால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். 8 ஆம் இடத்துக்கு சனி பகவான் செல்வதால் ஏராளமான நன்மைகளைக் கொடுக்கப் போகிறார். உத்தியோகத்தில் உங்கள் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாதத்தை தவிர்ப்பது நல்லது. பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் பணி வாய்ப்பு உண்டாகும். புதிய வேலைகள் கிடைக்கும் யோகமும் உண்டாகும். எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் நிதானமாகவும், பொறுமையாகவும் இருப்பது அவசியம். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம், தலைவலி, தூக்கமின்மை ஏற்படும் வாய்ப்புள்ளது.

பரிகாரம் - மகான்கள் வழிபாடு, சித்தர்கள் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். திருக்கொள்ளிக்காடு தலத்துக்குச் சென்று வருவது அதிர்ஷ்டத்தையும், நன்மையையும் தரும்.

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு களத்திர ஸ்தானம் எனும் 7 ஆம் இடத்துக்கு சனி பகவான் வரப் போகிறார். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பனிபோல் நீங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேலையில் இருந்து வந்த சவால்கள், பாதிப்புகள் நீங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். உங்களுடைய வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம். ஜாமீன் கையெழுத்து போடுவது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கடுமையான சொற்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இனிமையாகப் பேசுவது நல்லது. கணவன் அல்லது மனைவியிடம் நல்ல கெட்டதுகளை பகிர்ந்து கொள்வது நல்லது. பல் தொடர்பான பிரச்சனைகள், சுளுக்கு, மூட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

பரிகாரம் - அனுமன் வழிபாடு உங்களுக்கு அருமையான பலன்களைத் தரும். அனுமன் சாலிசா, அனுமன் மந்திரங்களைப் படிப்பது நல்லது.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி. உத்தியோகத்தில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவது நல்லது. ஆலோசனை கொடுப்பவர்களிடம் அதனை கேட்டுக் கொள்வது நல்லது. நிதானம், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. எந்தவொரு ரகசியத்தையும் மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் பிற் தலையீடு, மற்றவர்கள் விஷயத்தில் உங்கள் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தப் பிரச்சனை, ஹார்மோன் பிரச்சனை போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.

பரிகாரம் - நரசிம்மர் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். கஞ்சனூர் சென்று சுக்ர பகவானை வழிபட உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு பாதச் சனி தொடங்குகிறது. இருப்பினும் ஜென்ம சனி விலகுவதால் நிம்மதியை ஏற்படுத்தும் காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளால் பாராட்டப்படுவீர்கள். எடுத்த காரியங்களில் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. திறமைக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். வயிறு தொடர்பான பிரச்சனைகள், எலும்பு, மூட்டில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

பரிகாரம் - பைரவர் வழிபாடு உங்களுக்கு நன்மை பயக்கும். திங்களூரில் உள்ள சந்திர பகவானை வழிபடுவது அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பை உண்டாக்கும்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி நடக்கப் போகிறது. செய்யும் அனைத்து செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். கடன் பெற்றாவது சொந்த வீடுகளை கட்டி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். யாராவது ஆலோசனை கூறினால் அதனை ஏற்றுக் கொள்வது நல்லது. சோம்பல், சலிப்பைத் தவிர்த்து உற்சாக செயல்படுவது நல்லது. ரகசியங்களைப் பிறரிடம் கூறுவதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும். ஹார்மோன் பிரச்சனை, ரத்த அழுத்தப் பிரச்சனைகளுக்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

பரிகாரம் - விநாயகர் வழிபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தை தரும். கீழ்ப்பெரும்பள்ளத்தில் உள்ள கேது கோயிலுக்குச் சென்று வழிபடுவது நன்மைகளைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+