சனிப்பெயர்ச்சி: மேஷம் ராசிக்கு விரைய சனி எப்படி இருக்கும்?.. முழு விவரம் இதோ
சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு விரய சனி எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
நம்முடைய ஜாதகத்தில் 4 வீட்டை சனி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சனி ஒரு வீட்டில் இருக்கும் அந்த வீட்டு பலன்கள் சனி பகவானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 3, 7, 10 பார்வைகள் மூலமாக இன்னொரு 3 வீட்டை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த இரண்டரை காலம் சனிப்பெயர்ச்சியின் தாக்கமே அதிகளவில் இருக்கும்
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு விரைய சனி தொடங்குகிறது. இந்த விரைய சனியால் மேஷ ராசியினருக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விசயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இதுவரை லாப ஸ்தானத்தில் இருந்து வந்த சனி 2025 மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் விரைய ஸ்தானத்துக்குச் சென்று விரைய சனியாக அமரப் போகிறார். அதாவது உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகப் போகிறது. ஏற்கனவே ஏழரை சனியில் இருப்பதுபோல தான் உள்ளது. இதற்கு மேல் என்ன ஏழரை சனி என்று கூறும் நிலைமை தான் உங்களுக்கு இருக்கும்.
சனி லாப ஸ்தானத்தில் இருந்தாலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வாழ்க்கையில் எதுவும் சரியாக இருந்திருக்காது. சனியின் நேரடிப் பார்வை உங்கள் மீது விழுந்திருந்ததால் லாப ஸ்தானத்தில் சனி இருந்தாலும் உங்களுக்கு எந்தவிதமான சேமிப்பும் செய்ய முடியாத நிலைதான் இருந்திருக்கும். வரவுக்கு மீறி செலவுதான் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் இருந்திருக்கும்.
ஏழரை சனி காலத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றன. இந்த சனிப்பெயர்ச்சியில் குடும்ப நிலை சிறப்பாக இருக்கப் போகிறது. திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற அனைத்து சிறப்பான உங்களுக்கு நடக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற அமைப்புகள் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
குருவின் வீட்டில் சனி இருப்பதால் அபரிமிதமான நன்மைகள் உண்டாகப் போகின்றன. கடன் வாங்கியாவது சொந்த வீட்டு அமைப்பை உருவாக்கும் யோகம் உண்டு. 12 ஆம் வீட்டிற்கு சனி வருவதால் தொழில் விரையம் ஏற்படும். விரைய சனி காலகட்டத்தில் விரையம் கண்டிப்பாக இருக்கும் என்பதால் ஏதாவது ஒரு வகையில் சுபவிரையமாக கடன்களை உருவாக்கிக் கொள்வது நல்லது.
சுப விரையங்கள் செய்யவில்லை எனில் அப விரைய செலவு எனும் மருத்துவம் உள்ளிட்ட செலவுகள் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் மன உளைச்சல்கள் இருக்கத்தான் செய்யும். குடும்பம், வேலை, தொழில் என ஏதாவது ஒரு விஷயத்தில் மன உளைச்சல் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. சனி எப்போதும் எதையாவது கொடுத்துவிட்டு தான் செல்வார். வாழ்க்கையின் படிப்பிணைகளையும், முன்னேற்றத்தையும் கொடுப்பார்.
சொந்த தொழில் அமைப்பு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஏற்றம் இறக்கம் இருந்தாலும் தொழில் மன நிறைவாக இருக்கும். மேஷ ராசியினர் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையிடுவது, ஜாமீன் கொடுக்காமல் இருப்பது நல்லது. சனியின் வக்கிரப் பார்வை விலகுவதால் அனைத்து விதமான செளபாக்கியங்களும் கிடைக்க கூடிய காலகட்டமாக இருக்கும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications