சனிப்பெயர்ச்சி: சிகரத்தை தொடும் மகரம்.. எல்லா அதிர்ஷ்டமும் உங்களுக்குதான்.. ராஜவாழ்க்கை வாழ்வீங்க

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள், பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கிரகப் பெயர்ச்சி என்றால் அது சனிப்பெயர்ச்சி தான். 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

Sani peyarchi Sani peyarchi palangal Magaram

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் மூன்றாம் இடத்துக்கு வருகிறார் சகாய சனி. அதாவது ஏழரை சனி விலகுகிறது என்று அர்த்தம். ஏழரை சனி இருந்தாலும் உங்களுடைய ராசியாதிபதி சனி என்பதால் உங்களுக்கு அனைத்துவிதமான பலன்களையும் தந்திருப்பார். நவக்கிரகத்தில் இருக்கும் கேது பகவானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அஷ்டமத்தில் கேது வருவதால் கேது ஸ்தலத்துக்குச் செல்வது நல்லது.

கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்துக்கு சென்று வருவது நல்லது. ஒரு கிலோ பசு நெய், விபூதி, குங்குமம் சிவன், பார்வதியிடம் வைத்து வழிபடுவது நல்லது. அந்த குங்குமம், விபூதியை தினந்தோறும் பயன்படுத்துவது நன்மை பயக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, பல், வாய், காது, மூக்கு, தொண்டை ஆகிய பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏழரை சனி விலகிவிட்டது என்று வண்டியில் செல்லும்போது வேகமாகச் செல்லும்போது, செல்போன் பேசிக் கொண்டு போவதை தவிர்க்க வேண்டும். கூடா நட்பு கேடு விளைவிக்கும். நண்பர்கள் விஷயத்தில், ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை, முதுகுத் தண்டுவடம், கழிவு, வயிறு, நரம்பு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 6 இல் குரு வருகிறார்.

சனி இரண்டரை ஆண்டுக்கு நல்ல பலன்களைத் தரப் போகிறது. வீடு, நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு., வளர்ச்சி, நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம், தொழில் மாற்றம், சந்தோஷம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சினிமா துறை, அரசியலில் இருப்பவர்களுக்கு, அரசுத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். அங்கீகாரம், விருது பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

எல்லா விதத்திலும் ஏற்றத்தை அதிகமாகப் பெறக்கூடியவர்களில் மகர ராசிக்காரர்களும் ஒரு ராசியினர் ஆவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். என்ன தொழில் செய்யலாம் என்று வருத்தப்பட்டவர்களுக்கு சிறப்பான முன்னேற்றமாக இருக்கும். சுயதொழில் செய்து, சொந்த காலில் நிற்பீர்கள். உணவுத் துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயம் உண்டாகும்.

2ல் ராகு 8 ல் கேது இருப்பதால் காரியசித்தி மாலை, கோளார் பதிகம் படிப்பது உங்களுக்கு அமோகமான வெற்றி வாய்ப்பை வழங்கும். அனைத்துவிதமான செல்வம் செழிப்பு, பெயர், புகழ், சொத்துகளை வாங்கி குவிக்கும் யோகம், புதிய தொழில் செய்வதற்கான யோகம் என்று அதிர்ஷ்டம் தரும் பெயர்ச்சியாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+