சனிப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு சொத்துகளை வாங்கி குவிக்கும் யோகம்.. 27 ஆண்டுக்குப் பின் அடிச்சது ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள், பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கிரகப் பெயர்ச்சி என்றால் அது சனிப்பெயர்ச்சி தான். 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

Sani peyarchi Sani peyarchi palangal Thulam

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் 27 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஜாக்பாட். எல்லா விஷயங்களிலும் அனுகூலத்தை காணப் போகிறீர்கள். 9 இல் குரு பகவான் வருகிறார். சனி 5 இல் இருந்து 6 ஆம் இடத்துக்குப் போகிறார் ரோக சனி. 6 இல் சனி வருவது என்பது யோக பலன்களைத் தரும். அடுத்த இரண்டரை ஆண்டுகளை நீங்கள் யோசிக்கவே தேவையில்லை. சனி பகவான் உங்கள் ராசியில் உச்சம் பெறுவதால் அனைத்து விதமான பலன்களையும் அள்ளித் தருவார்.

இந்த சனிப்பெயர்ச்சி உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். தேக ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதுகு, கழிவு, அலர்ஜி, அக்கி, தோல் வலி போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 35, 40 வயதில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுடைய படிப்பு, தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். அனுகூலமாக இருப்பார்கள். பிள்ளைகளுடைய நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். பிள்ளைகள் ஏற்றம் பெறுவார்கள்.

வியாபாரம், படிப்பு, தொழிலில் ஏற்றம் ஏற்படும். சனி 9 இல் வந்து 5 ஆம் இடத்தைப் பார்க்கிறார். 5 இல் ராகு வருவதால் அபிராமி அந்தாதியில் 40, 59, 75 பாடல்களைப் படிப்பது நல்லது. பூர்வ புண்ணிய பலத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெய்வ காரியங்களுக்கு நல்ல திருப்பணிகளைச் செலுத்துவீர்கள். கோயிலில் உள்ள மாடுகளுக்கு தீவனம் அளிக்கும் யோகம், நலிந்த மாடுகளை காப்பாற்றுவீர்கள். இதன் மூலம் தலைமுறைக்கு புண்ணியத்தை சேர்ப்பீர்கள்.

நல்ல தொலைதூர பயணங்கள், விடுபட்ட யாத்திரைகளை முடிப்பீர்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கணவன், மனைவியிடையே இருந்த அந்நியோன்ய குறைபாடுகள் நீங்கும். நீண்ட நாளாக பயணம் மேற்கொள்ளதா கணவன், மனைவிகள் பயணம் செய்வீர்கள். அதிக அளவு சந்தோஷம், அசையும், அசையா பொருள் சேர்க்கை, ஆடை, ஆபரண சேர்க்கை, மாடி வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

துலாமிற்கு எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும், அதேசமயம் பெற்றோர் பெரியோரின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்துகளை புனரமைப்பீர்கள். குடிசைகளை கல் வீடாக கட்டுவீர்கள். பிரம்மாண்டமாக மாடி வீடு கட்டும் யோகம் உண்டாகும். நலிந்த இடங்களை புதுப்பிப்பீர்கள். நல்ல விலைக்கு போகும். ஏற்றம் பெறும் யோகம், அனுகூலம் உண்டு.

தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடுவதை கண்கூடாக பார்ப்பீர்கள். வண்டி வாகனம் வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. தைரியம் உண்டாகும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். துலாம் ராசிக்காரர்கள் இருக்கும் வீட்டில் அனைத்து சுப காரியங்களும் நடக்கும். கணவன், மனைவிக்கு அனுகூலம் உண்டாகும்.

தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். பூர்வ புண்ணியத்தை குரு பார்ப்பதால் யோக பலன்கள் கிடைக்கும். 6 ஆம் இடத்தில் சனி இருப்பதால் சத்ரு ஜெயம் உண்டாகும். பணக் கஷ்டம், மனக்குழப்பம் தீரும். புதிய சொத்துகளை வாங்குவீர்கள். அனைத்து சொத்துகளையும் மீட்பீர்கள். ஆடை ஆபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

திருநாகேஸ்வரம் சென்று சிவன் பார்வதியை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். பசுநெய், விபூதி, குங்குமத்தை படைத்து சுவாமியை மனதார வழிபடுவது நன்மை பயக்கும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், அனுகூலத்தையும் தரக்கூடியதாக அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+