Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் [Viruchigam Sani peyarchi palan]
விருச்சிக ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனியாக 4 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 5 ஆம் இடத்துக்கு செல்கிறார். 5 ஆம் இடம் என்பது புத்திர சந்தானத்துக்கான அமைப்பாகும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75, ஆவது பாடல்களைப் படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமைகளை குறைக்கும் அமைப்பும் ஏற்படும் என்பதால் 90 ஆவது பாடல்களைப் படிப்பதும் நல்லது.

கவனம்
வாகனத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் இருந்து பலவிதமான நன்மைகளும், அனுகூலங்களும் ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக ஏற்படும். ஜூன் மாதத்தில் குரு 9 ஆம் இடத்துக்கு வருகிறார். பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுடன் தகராறுகள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அவர்களுடைய ரத்த பந்த உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
குட்நியூஸ்
சுபச் செய்திகள், சுப விஷயங்கள், அனுகூலங்கள் அடுத்தடுத்து ஏற்படும். குருவின் பார்வை பரிபூரணமாக ஒரு வருடமாக இருந்து உங்களுக்கு பல விதமான முன்னேற்றங்களை ஏற்படுத்தும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில், தொழிலில் உங்களுடன் இருப்பவர்களுடன் செய்யக்கூடிய பிரச்சனைகளில் நீங்கள் சிக்குவதற்கான, பாதிப்புகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
தொழில்
தொழிலில் காணப்பட்டிருந்த பலவிதமான சங்கடங்கள் நிவர்த்தியாகும். புதிய தொழில் அமைப்பு ஏற்படும். கர்ப்பிணிகள் குலதெய்வத்தை மானசீகமாகப் பிரார்த்தனை செய்வது, குலதெய்வத்தின் மந்திரத்தை தினந்தோறும் உச்சரிப்பதும் நன்மையைத் தரும். மருத்துவர் சொல்லும் விஷயங்களை மீறக் கூடாது. மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளை செய்வது நல்லது.
செல்வாக்கு
நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். 2 ஆம் அதிபதியும், 5 ஆம் அதிபதியுமான குரு பகவான் ஜூன் மாதத்தில் 9 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பதால் அதிர்ஷ்டத்தின் அமைப்பு உண்டாகும். ஆடை, ஆபரணங்கள், பண வரவுகள் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழிலில் ஏற்றம் உண்டாகும்.
தடைகள் நீங்கும்
இழுபறியாக இருந்த பலவிதமான பிரச்சனைகள், கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் விஷத்தில் இருந்து வந்த படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை, தொழில் தடை என அனைத்து விதமான தடைகளும் பரிபூரணமாக நீங்கும். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஏற்றத்தைத் தரும்.
பரிகாரம்
வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது ஏற்றத்தைக் கொடுக்கும். மாதம் ஒரு செவ்வாய்க்கிழமையில் முருகர் வழிபாடு செய்வது, சுப்பிரமணிய புஜங்கம் கேட்பது, சொல்வது அற்புதமான அமைப்பைத் தரும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications