Sani Peyarchi: வச்சு செய்யப் போகும் சனி பகவான்.. சனிப்பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்
சனிப்பெயர்ச்சி: கிரக நிலை மாற்றங்களின் சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் 6.3.26 (இன்று) கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் அதிக கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம். [Sani peyarchi palan pariharam]
மேஷம்
12 ஆம் இடத்திக்கு வருகிறார். 12 என்பது மறைவு ஸ்தானத்தில் விரய சனியாக பெயர்ச்சி ஆகியுள்ளார். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடைமைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். வீண் விரயம் அதிகரிக்கும். எனவே செலவில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்திலும் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். உணவு கட்டுப்பாடு அவசியம் குழந்தைகள் விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

கல்வியில் அதிக கவனம் வேண்டும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணி மாறுதலுக்கு இது சரியான காலம் இல்லை. பயணங்கள் அதிகரிகக் கூடும். வாரம் ஒருமுறையாவது ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.
சிம்மம்
சனி பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதை அஸ்டம சனி என்பார்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனம் வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கலில் அதிக எச்சரிக்கை அவசியம். தெரியாத இடங்களுக்கு யாரையும் நம்பி செல்ல வேண்டாம். அதேநேரத்தில் சனி எதையும் எதிர்த்து நிற்பவர் என்பதால் மனவலிமை அதிகரிக்கும். நரசிம்மர் வழிபாடு நற்பலன்களை தரும்.
கும்பம்
சனி பகவான் உங்களின் 2 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். பாத சனி தொடங்குகிறது. மனக் குழப்பம் நீங்கும். கஷ்டங்கள் படிப்படியாக குறையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கலில் அதிக எச்சரிக்கை வேண்டும். பூர்விக சொத்துகள் கைக்கூடி வரும். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். கணவன் - மனைவி உறவில் அந்யோநியம் அதிகரிக்கும். முருகன் வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும்.
மீனம்
சனி பகவான் உங்கள் ராசிக்குள் பயணமாகிறார். ஜென்ம சனி தொடங்குகிறது. அதைப் பார்த்து பயம் வேண்டாம். திட்டமிட்டு செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் மேற்கோள்ள வேண்டாம். முதலீடுகளில் அதீத எச்சரிக்கை வேண்டும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஆஞ்சிநேயர் வழிபாடு அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications