சனிப்பெயர்ச்சி: தனுசு, மகர ராசியினருக்கு சனி பகவான் கொடுப்பாரா?.. கெடுப்பாரா?.. முழு விவரம் இதோ
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். மற்ற கிரகங்களை விட ராசியில் அதிக காலம் பயணிப்பது சனி பகவான் தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு, மகர ராசிகளுக்கு பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொகுப்பில் சனிப்பெயர்ச்சியால் தனுசு மற்றும் மகர ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றம் குறித்து பார்க்கலாம்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு 3 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்துக்கு அர்த்தாஷ்டம சனியாக மாறுகிறார். பெரிய கஷ்டங்கள் எதுவும் வராது. உங்களுடைய ராசிநாதனின் குருவின் இன்னொரு வீட்டில் தான் சனி உட்காருகிறார். சனி பகவான் மூன்றாம் இடத்தில் இருந்தபோது பெரிய அளவில் எந்த நன்மைகளையும் கொடுக்கவில்லை.
4 ஆம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக வரும் சனி பகவான் ஓரளவுக்கு நல்ல பலன்களைத் தருவார். ஆனால், அம்மா சம்பந்தப்பட்ட விஷயங்கள், வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது பிரச்சனைகள் ஏற்படும். மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கல்விக் கூடங்களில் மனமாற்றம் உண்டாகும் சூழ்நிலை ஏற்படும். இளம்வயது தனசு ராசி பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் துறை ரீதியாக பெரிய விதமான பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் அலைச்சல்கள் அதிகம் இருக்கும். சாப்பாடு கூட சாப்பிட முடியாத வகையில் அலைச்சல் இருக்கும். வெளிநாடு, வெளிமாநில பயணங்கள் ஏற்படும். வெளிமாநிலத்திற்கு இடமாற்றமாகும் நிலை ஏற்படும். பிடிக்காத மேலதிகாரியுடன் சேர்ந்து வேலை செய்யும் அமைப்பு உண்டாகும்.
பத்தாம் இடத்தில் சனி பார்ப்பதால் வேலை அமைப்பில் கடுமையான பிரச்சனைகள் ஏற்படும். 4 ஆம் இடத்தில் இருக்கும் சனி ராசியைப் பார்ப்பதால் பிடிவாதக்காரர்கள் ஆகும் நிலை ஏற்படும். கடினமாக போக்கு உங்களிடம் உண்டாகும். கொஞ்சம் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. வேலை, தொழில் மாற்றங்கள், அதன் மூலம் சில முன்னேற்றங்கள் ஏற்படும் காலகட்டமாகவும் இருக்கும்.
மகரம் - ஏழரை சனி முடிவதால் இனி யோகமான காலகட்டமாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளாக கடும் பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். கடந்த இரண்டு வருடம் சிறிது நன்றாக இருந்திருக்கும். 2020, 2021, 2022 ஆகிய 3 ஆண்டுகள் உத்திராடம், அவிட்டம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள் படாத பாடு பட்டிருப்பீர்கள். அந்த அமைப்புகள் எல்லாம் உங்களுக்கு விலகப் போகிறது.
ஏழரை சனி முடிந்துவிட்டாலே வாழ்க்கையில் நல்ல நிலை ஏற்பட்டு விடும். யோக மாற்றங்கள் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணம் கையில் தங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். உங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். காதல் நிறைவேறும், திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். புதிய தொழில், வியாபாரத்தை ஆரம்பிப்பீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும். புதிய கிளைகளைத் திறக்கும் யோகம் உண்டாகும். வளர்ச்சிக்கான கடன்கள் கிடைக்கும். இதுவரை உறுத்திக் கொண்டிருந்த கடன்கள் தீரும். காதலில் வெற்றி பெறுவீர்கள். மனது சாந்தமாக இருக்கும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும்.
ஏழரை சனி முடிகிறது. குருப்பெயர்ச்சியில் 12 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும். வெளிநாடு, வெளிமாநிலத்திற்குச் செல்ல வேண்டும். கல்வி பயில வேண்டும், செட்டிலாக நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். வீடு வாகனம் வாங்கக்கூடிய யோக காலமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
-
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. இந்த வார பலன்.. முழு விவரம் இதோ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications