2025 இல் சனிப்பெயர்ச்சி நடக்குமா?.. நடக்காதா?.. காஞ்சி மகாபெரியவா கூறியது இதுதான்
சனிப்பெயர்ச்சி: 2025 மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சனிப்பெயர்ச்சி 2025 இல் நடக்கிறதா, 2026 இல் நடக்கிறதா என்று விவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. உண்மையில் சனிப்பெயர்ச்சி எப்போது நடக்கிறது. வரும் மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி நடக்குமா, நடக்காதா என்பது குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கிரகப் பெயர்ச்சிகளில் முக்கியமான கிரகப் பெயர்ச்சியாக பார்க்கப்படுவது சனிப்பெயர்ச்சி தான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும், கெடு பலன்களையும் கொடுப்பவர் சனி பகவான். அதனால், சனி பகவானின் பெயர்ச்சி என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார் என்றுதான் ஜோதிடர்கள் கூறி வந்தனர். ஆனால், இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியே இல்லை, பலரும் மக்களை நன்றாக ஏமாற்றுகின்றனர் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
இதனால், உண்மையில் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி நடக்குமா, நடக்காதா, சனிப்பெயர்ச்சி எப்போது என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிரபல ஜோதிடர் சிம்மா அளித்துள்ள விளக்கம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிடம் என்பது இரண்டு பஞ்சாங்கம் படி பார்க்கப்படுகிறது. ஒன்று திருக்கணிதப் பஞ்சாங்கம், மற்றொன்று வாக்கியப் பஞ்சாங்கம் என்று வித்தியாசப்படும். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி ஆகிறது. ஆனால், வாக்கியப் பஞ்சாங்கப்படி அடுத்த ஆண்டுதான் சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இது உண்மைதான். அப்படியென்றால் திருக்கணிதப் பஞ்சாங்கம் அவ்வளவு மோசமானதா என்றால் கிடையாது.
வாக்கியப் பஞ்சாங்கம் என்ற ஒரு பஞ்சாங்கம் தான் முதலில் இருந்தது. ஆனால், அது சரியாக இல்லை. சில விஷயங்கள் அதில் வித்தியாசப்பட்டன. இதையடுத்து, திருத்தி அமைக்கப்பட்ட பஞ்சாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தப் பஞ்சாங்கம்தான் திருக்கணிதப் பஞ்சாங்கம். இந்த திருத்தி அமைக்கப்பட்ட பஞ்சாங்கமான திருக்கணிதத்தை பல ஜோதிடர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
நமது ஊரில் காஞ்சி பெரியவர் இந்த திருக்கணிதப் பஞ்சாங்கத்தை பின்பற்றுங்கள் என்று கூறியுள்ளார். அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் இந்த இரண்டு பஞ்சாங்கத்தையும் ஜோதிடர்கள் பலர் பயன்படுத்துகின்றனர். இப்போதுள்ள பெரும்பாலான ஜோதிடர்கள் திருக்கணிதப் பஞ்சாங்கத்தைதான் பயன்படுத்துகின்றனர்.
வாக்கியப் பஞ்சாங்கம்படி எழுதப்பட்ட ஜாதகத்திலும், திருக்கணிதப்படி எழுதப்பட்ட ஜாதகத்திலும் வித்தியாசம் இருக்கும். அதனால்தான் நிறைய பேருக்கு நாம் என்ன ராசி, நட்சத்திரம் என்பதில் இப்போதும் குழப்பம் ஏற்படும். தற்போது வரக்கூடிய அனைத்து ஜாதகங்களும் திருக்கணிதப்படிதான் கணிக்கப்படுகிறது.
வருகிற மாரச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறதென்று பல ஜோதிடர்களும் கூறி வருகின்றனர். சிலர் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியே இல்லை அடுத்தாண்டு தான் நடைபெறுகிறது என்று கூறுகின்றனர். பிரபல ஜோதிடர் ஒருவர் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி என்று பல ஜோதிடர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். உண்மையில் சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டுதான் என்று கூறியுள்ளார்.
இது ஏமாற்று வேலையா என்றால் இதில் எந்தவொரு ஏமாற்று வேலையும் இல்லை. அந்த பிரபல ஜோதிடர் வாக்கியப் பஞ்சாங்கத்தை பின்பற்றுவதால் சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டு நடைபெறுகிறு என்று கூறுகிறார். ஆனால், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி நடக்கிறது.
திருநல்லாறில் அடுத்த ஆண்டுதான் அதாவது 2026 இல் தான் சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. எல்லா கோயில்களில் பெயர்ச்சிக்கென்று சிறப்பு பூஜை, சிறப்பு பரிகாரங்கள் நடத்தப்படுகிறது. அந்த கோயிலில் சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படுவதால் அதுதான் உண்மையான சனிப்பெயர்ச்சி என்பது முற்றிலும் தவறு.
வாக்கியப் பஞ்சாங்கத்தை கடைப்பிடிக்கப்படுவர்களுக்கு அடுத்த ஆண்டு சனிப்பெயர்ச்சியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்த ஆண்டும் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இரண்டு பஞ்சாங்கமுமே 100 சதவீதம் சரியா என்றால் கிடையாது. உதாரணமாக சென்னையில் இரண்டு குழந்தைகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறக்கிறதென்று வைத்துக் கொள்ளலாம். ஒரு குழந்தை தாம்பரத்திலும், இன்னொரு குழந்தை அம்பத்தூரிலும் பிறக்கிறதென்றால் நீங்கள் கணினியில் ஜாதகம் எடுக்கும்போது சென்னை என்று போட்டால் ஒரே மாதிரியாகத்தான் வரும்.
ஆனால், தாம்பரம் என்று குறிப்பிட்டால் லாட்டிடியூட், லாங்டிடியூட் கொஞ்சம் வித்தியாசப்படும். தொலைவைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஜாதக கட்டத்தில் கிரகங்கள் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாவற்றிலும் காணப்படும். அதனால், திருக்கணிதம் 100 சதவீதம் சரியானது என்றும் கூற முடியாது, அதே நேரத்தில் வாக்கியம் தான் 100 சதவீதம் என்றும் கூற முடியாது.
இது அனைத்துமே ஜோதிடருடைய அனுபவம், ஆராய்ச்சி, அவர் பயன்படுத்தும் முறையின்படி தான் இருக்கும். இதுதான் சரியென்று ஜோதிடத்தைப் பொருத்தவரை எதுவுமே கிடையாது. அப்படி நிரூபிக்கவும் முடியாது. பிரபல ஜோதிடர்கள் பலரும் இரண்டு பஞ்சாங்கத்தையும் பயன்படுத்துகின்றனர். அதனால் இதனை குழப்பிக் கொள்ள எதுவுமே இல்லை. இதில் நாம் வாக்கியத்தைப் பின்பற்றினால் அடுத்த ஆண்டு சனிப்பெயர்ச்சி, திருக்கணிதத்தைப் பின்பற்றினால் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி நடைபெறும் அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications