விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி எப்போது முடியும்?.. சனி அள்ளிக் கொடுப்பாரா.. கெடுப்பாரா?
சனிப்பெயர்ச்சி: மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி எப்போது முடியப் போகிறது. இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், ஏற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடியப் போகிறது. உங்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் அர்த்தாஷ்டம சனி தொடங்கியது. இன்று வரை அர்த்தாஷ்டமசனி தொடங்கி பல்வேறு துன்பங்களையும், சவால்களையும் சனி பகவான் கொடுத்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தில் பிரச்சனை, வேலை இழப்பு, நிம்மதியின்மை, தொழிலில் நஷ்டம், காதல் தோல்வி என பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வந்திருப்பீர்கள். ஒரு சிலர் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறீர்கள்.
இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் அர்த்தாஷ்டம சனி முழுமையாக முடியும்போது உங்களை விட்டு விலகப் போகிறது. இந்த அர்த்தாஷ்டம சனி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சியின் போது முழுவதுமாக முடியப் போகிறது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். அதாவது உங்கள் ராசிக்கு 4 ஆம் வீட்டில் இருந்து 5 ஆம் வீட்டுக்குப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முழுவதுமாக நிறைவடைகிறது.
சனி ஐந்தாம் வீட்டுக்கு வருவதால் மிகவும் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முதல் பஞ்சமசனி தொடங்குவதால் அடுத்த இரண்டரை வருடம் 91 சதவீதம் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக தொழில், வேலையில் இதுவரை இருந்து வந்த அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து நல்ல நிலைக்கு செல்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
தனிப்பட்ட வகையில் கொடுத்த வாக்கை குடும்பத்தில், வெளியில் காப்பாற்றுவீர்கள். உன்னத ஸ்தானத்தை பெறப் போகிறார்கள். பிள்ளைகளுடன் கோபம், பிள்ளைகளின் வண்டி, வாகனம், பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியைப் படிப்பது பிள்ளைகள் வழி வரும் பிரச்சனைகளைத் தடுக்கும்.
சுப விரையம் உண்டாகும். எல்லாவற்றிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தனம், குடும்பம், வாக்கு பெருகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தாய் வழி, தந்தை வழி உறவு மேம்படும். ரத்த பந்த உறவுகளுக்குள் இருந்து வந்த அனைத்து விதமான பிரச்சனைகள் தீரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்க்காத அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உண்டாகும். இந்த சனிப்பெயர்ச்சி முயற்சியையும், முன்னேற்றத்தையும் தரும் காலமாக இருக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications