Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சியில் ஜாக்பாட் யோகம் பெறும் ராசிகள் இதுதான்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். மிகப்பெரிய கோடீஸ்வர யோகம், ஜாக்பாட் யோகம் எந்த ராசியினருக்கு உள்ளது என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.

Sani peyarchi Sani peyarchi palangal

நம்முடைய ஜாதகத்தில் 4 வீட்டை சனி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சனி ஒரு வீட்டில் இருக்கும் அந்த வீட்டு பலன்கள் சனி பகவானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 3, 7, 10 பார்வைகள் மூலமாக இன்னொரு 3 வீட்டை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த இரண்டரை காலம் சனிப்பெயர்ச்சியின் தாக்கமே அதிகளவில் இருக்கும்

கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் எந்த ராசியினர் ஜாக்பாட் யோகம் பெறுவார்கள் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம் - சனிப்பெயர்ச்சியில் மிகப்பெரிய ஜாக்பாட் யோகம், கோடீஸ்வர யோகம் யாருக்கு உள்ளது என்று பார்த்தால் அதில் முதன்மையாக ரிஷப ராசி, ரிஷப லக்னகாரர்களுக்கு உண்டு. சனி ரிஷபத்துக்கு லாப ஸ்தானத்தில் 11 ஆம் வீட்டில் போவதால், மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும். நாம் எந்தவொரு விஷயம் செய்தாலும் அதில் வளர்ச்சி, லாபம் என்று வேண்டும் என்று நினைப்போம். அதனை குறிக்க கூடியதுதான் லாப பாவம். ஜாதகத்தில் 11 ஆவது பாவம்தான் லாப ஸ்தானம். அந்த 11 ஆம் இடத்தில் கோச்சார சனி ரிஷப ராசிக்குப் போகிறது. அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு லாப சனியாக இருக்கும். எந்தவொரு முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றியைக் கொடுக்கக்கூடிய யோகம் தரும் கிரகமாக சனி இருக்கும்.

முயற்சி எடுத்தாலே உங்களுக்கு அதிகப்படியாக முன்னேற்றத்தைக் கொடுக்கக்கூடிய காலமாக இருக்கும். ரிஷபத்தைப் பொருத்தவரை சனி பகவான் தான் யோகக்காரகன். அதனால், உங்களுக்கு முழுக்க முழுக்க யோக பலன்களை தரக்கூடியவராக சனி இருப்பார். அதனால், அடுத்த இரண்டரை ஆண்டு உங்களுக்கு ஜாக்பாட் யோகம் உண்டாவற்கான வாய்ப்புள்ளது.

மிதுனம் - மிதுன ராசி, மிதுன லக்னகாரர்களுக்கு ஜாக்பாட் யோகம் உண்டு. அதாவது சனி பகாவன் பத்தாம் வீட்டில் கர்ம ஸ்தானத்தில் போவதால் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும். 10 இல் ஒரு பாவி இருப்பது அதிர்ஷ்டத்தை தரும். மிதுனத்துக்கு தொழில் பாவத்தில் சனி வருவதால் அடுத்த இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் ரீதியான அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அடுத்த இரண்டரை காலம் யோக காலமாக இருக்கும். காலபுருஷனுக்கு 12 ஆவது பாவமாக இருப்பதால் வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான அதிகப்படியான வாய்ப்பு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். தொழில் பாவம் என்பதால் தொழில்காரகன் சனி போகிறார். மிதுனத்தைப் பொருத்தவரை பாக்கியாதிபதி என்பதால் எந்தவொரு காரியங்களை தொட்டாலும் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும்.

கடகம் - கடக ராசிக்காரர்கள், கடக லக்னக்காரர்களுக்கு சனி பாக்கிய ஸ்தானத்தில் போகிறார். பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி கிரகங்கள் வந்தால் அதிர்ஷ்டமான பலன்களைத் தரும். தர்மகர்மாதிபதி யோகத்தால் நீங்கள் எடுக்கும் காரியங்களுக்கு தெய்வத்தின் அனுகூலம் உண்டாகும். குறிப்பாக, இந்த கடக ராசியைப் பொருத்தவரை அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் எந்த முயற்சி எடுத்தாலும் சனி பகவானின் துணை இருக்கும். உங்களுக்கு அனைத்து பாக்கியத்தையும் அள்ளித் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். முன்ஜென்மத்தில் நீங்க செய்த கர்மங்களுக்கான அனைத்து பலாபலன்களையும் உங்களுக்கு கொடுக்கப் போகிறார்.

விருச்சிகம் - விருச்சிகம் ராசி, விருச்சிக லக்கினக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை காலம் சனி பகவான் ஜாக்பாட் யோகத்தை கொடுக்கப் போகிறார். சனி பகவான் பஞ்சம ஸ்தானத்துக்கு செல்கிறார். ராசியில் இருந்த 5 ஆம் வீடு பஞ்சம ஸ்தானம். சுக ஸ்தானதிபதி பஞ்சம ஸ்தானத்துக்கு செல்வதங்கள் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்படும், வீடு, வண்டி, வாகனம், சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும். பல பேருக்கு நீண்டகாலமாக வர வேண்டிய சொத்துகள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

சனி பஞ்சம ஸ்தானத்தில் போவது மிகப்பெரிய ராஜயோகத்தை தரும். விருச்சிகத்தைப் பொருத்தவரை வீடு, வாகனம், சொத்து வாங்க நல்ல நேரமாக இருக்கும். பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் முயற்சி எடுத்தாலே போதும் அது நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதிகப்படியான சொத்து சேர்க்கும் யோகம் விருச்சிக ராசியினருக்குத்தான் உண்டு.

மகரம் - மகர ராசி, மகர லக்னக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் ஜாக்பாட் யோகம் கொடுக்கப் போகிறார். ஏழரை சனி முடிவதால் உங்களுக்கு அனைத்துவிதமான நன்மைகளும் நடக்கும். மகரத்துக்கு மூன்றாம் வீட்டுக்கு சனி போகிறார். மூன்றாம் வீடு என்பது சகாய ஸ்தானம், முயற்சி ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. சகாய சனி என்பது நாம் எந்த முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சிக்கு யாராவது ஒருவர் உதவி செய்வார். அந்த உதவிதான் சகாயம். அந்த ஸ்தானத்தில் சனி வருவதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சனி பகவானின் துணை கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+