Kumbam Rasi Palan: அந்த வீடு என்ன விலை கேளு.. அந்த கார் என்ன விலை கேளு - கும்பம் ராசிக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கும்பம் ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.

13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

sani-vakra-nivarthi-2025-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-people-during-this-period

சனி வக்ர நிவர்த்தி

பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் கும்பம் ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.

கும்பம்

கும்பம் ராசிக்கு சனி பகவான் தான் ராசி நாதன். அவர் வக்ர கதியில் இருந்ததால் பல்வேறு பிரச்சனைகள் வந்திருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை, அழுத்தம் அதிகமாக இருந்திருக்கும். மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்திலும், சமூகத்திலும் உங்களின் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்திருக்கும். சனி வக்ர நிவர்த்தியால் அந்தப் பிரச்சனைகள் எல்லாம் விலக போகிறது.

நிலப்பிரச்னை

குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீர்ந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீரப்போகிறது. பழைய பாக்கி வசூலாகும். ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்சனைகள் சரியாகி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நிலம், சொத்து ஆகியவற்றில் இருந்த பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சகோதரர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.

சம்பள உயர்வு

புதிய நிலம், வீடு போன்ற சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் மேம்படும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தொலை தூர தொடர்புளால் ஆதாயம் உண்டு. மனதில் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். உத்யோகத்தில் தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

மகிழ்ச்சி

உத்யோகத்தில் உயரதிகாரிகளால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தை, காப்பீடுகளில் இருந்த முதலீடுகள் நல்ல லாபத்துடன் கிடைக்கும். வெளிநாடு சென்றவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக அப்படியே நடக்க போகிறது. மன பாரம் நீங்கி மனதில் மகிழ்ச்சி கூடும்.

பரிகாரம்

சனி வக்ர கதியில் இருந்து விடுபட்டாலும், பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எந்த புதிய முயற்சியை மேற்கொள்வதாக இருந்தாலும் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறர் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சனிக்கிழமை தோறும் வீட்டு அருகில் உள்ள ஆஞ்சிநேயர் கோயில் சென்று வழிபடுவது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+