சனிப்பெயர்ச்சி 2025: சனியின் பிடியில் இருந்து விலகும் கடகம், விருச்சிகம், மகரம் – சூப்பரான மாற்றம்
சனி பெயர்ச்சி: சனி பெயர்ச்சி ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை அறிய 12 ராசிகளும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள். இந்தாண்டு நடைபெறவுள்ள கிரக பெயர்ச்சிகளில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் சனியின் பிடியில் இருந்து கடகம், விருச்சிகம், மகரம் ராசிகள் விடுதலை பெறுகின்றன. இதனால் பெறவுள்ள பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
சனி பெயர்ச்சி வருகிற மார்ச் 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு.. அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம்.

நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள். சனியின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். சனியால் பாதிப்பு உள்ளதை போல, சில நன்மைகளும் உள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சனி பெயர்ச்சியின்போது கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ஆறு ராசிகள் அதிகளவு பிரச்னையில் சிக்கினார்கள். இந்நிலையில் வருகிற சனி பெயர்ச்சியின் மூலம் இதில் மூன்று ராசிகள் நிம்மதியை பெற போகின்றன. கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிகள் தான் சனிப்பெயர்ச்சியில் இருந்து விடுதலை பெற போகின்றன.
கடக ராசிக்கு சனி பகவான் எட்டாம் இடத்தில் அஷ்ட சனியாக இருந்து கொண்டு ஏராளமான பிரச்னைகளை கொடுத்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஏராளமான பிரச்னைகள் வந்திருக்கும். இந்த காலத்தில் அஷ்டம சனி விலகி அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக பயணம் அதிகரிக்கும். கடந்த காலங்களில் நடைபெறாத காரியங்கள் எல்லாம் நடக்கும்.
உங்களின் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். திருமண தடைகள் நீங்கி, திருமணம் ஆகாமல் கஷ்டப்படுவோருக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றத்தால் பொருளாதாரத்தில் உயர்வு இருக்கும். இந்த காலத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிக ராசிக்கு சனி பகவான் நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்து பல்வேறு துன்பங்களை கொடுத்து கொண்டிருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாகவே விருச்சிக ராசி ஏராளமான பிரச்னைகளை அனுபவத்திருப்பார்கள். தற்போது அர்த்தாஷ்டம சனி விலகுவதால் பாக்கியம் கிடைக்கப் போகிறது. மனதில் நிம்மதி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சனி பகவான் ஐந்தாம் இடத்துக்கு வருவதால் உங்களின் முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைக்கும். குரு பகவானின் நிலையும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உத்யோகம், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்கும். திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மகர ராசிக்கு இத்தனை நாட்கள் சனி பகவான் இரண்டாம் இடத்தில் பாத சனியாக சஞ்சாரம் செய்து ஏராளமான இன்னல்களை கொடுத்து வருகிறார். தற்போது பாத சனி விலகுவதுடன் ஏழரை சனியும் நிறைவடைய போகிறது. இதனால் இதுவரை இருந்த கஷ்டங்கள் விலகும். அடுத்த ஐந்து ஆண்டுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். அனைத்து கிரக பெயர்ச்சிகளும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
காரியங்களில் இருந்த தடைகள் விலகும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனம் உள்ளிட்டவை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களின் திறமை முழுவதுமாக வெளிப்பட்டு, அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் எதிரிகளையும் வென்று சாதனைகள் படைப்பீர்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications