"இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமு" - சொல்லி அடிக்கும் கடகம் ராசிக்கு அள்ளித் தரும் 4 கிரகங்கள்
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்களின் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீன ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது கடக ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீச்சமாக உள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.
கடக ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. தான் மட்டுமல்லாமல் தன்னை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்பவர் நீங்கள். எந்த காரியத்திலும் துணிச்சலுடன் இறங்குவீர்கள். ஆனால் அண்மை காலமாக நீங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் ஏராளம்.
உதவி மனப்பான்மை உள்ளம் கொண்ட நீங்கள் தற்போது பிறரின் உதவியை நோக்கி காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். கடன் சுமை அதிகரித்திருக்கும். எதிரிகள் அதிகரித்திருப்பார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் வலம் வந்தவர்கள் சொல்ல முடியாத சங்கடங்களை அனுபவித்திருப்பீர்கள். தற்போது நான்கு கிரகங்கள் பாக்கிய ஸ்தானத்தில் சேர்க்கை நடத்துவது பலன்களை அள்ளித்தர போகிறது.
தொழில் ரீதியாக உள்ள அனைத்து தடைகளும் நீங்கும். உங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலங்களில் இழந்த செல்வம், செல்வாக்கு எல்லாவற்றையும் சேர்த்து சம்பாதிப்பீர்கள்.
வெளிநாடு செல்வதற்காக முயற்சி செய்வோருக்கு அதற்குண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டு. நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் திருமண தடை இருப்போருக்கு அதற்கான தடைகள் நீங்கும். இந்த காலத்தில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணம் நடைபெற வாய்ப்புள்ளது.
அதேபோல திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் நீங்கும். சொத்துகளில் இருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வண்டி, வாகனம், ஆபரணங்கள் வாங்குவதற்கான யோகம் உள்ளது. கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
குழந்தைகளை வெளிநாடு, வெளிமாநிலங்களில் உயர்கல்வியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் குழந்தைக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்பும் உள்ளது. கணவன் - மனைவி உறவில் மட்டும் அவ்வப்போது மன கசப்புகள் வந்து நீங்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்திலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications