திடீர் அதிர்ஷ்டம்.. பணம் கொட்டும்.. தனுசு ராசியை திக்கு முக்காட வைக்கும் கிரக பெயர்ச்சிகள்
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன. இது தனுசு ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். வருகிற மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது தனுசு ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
தனுசு: சனிப்பெயர்ச்சி மூலம் தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் மூன்றாம் இடத்துக்கு ராகு பகவானும், ஏழாம் இடத்துக்கு குரு பகவானும் பெயர்ச்சி ஆவது சிறப்பான அமைப்பு. அதனால் அர்த்தாஷ்டம சனியை நினைத்து கவலைப்பட வேண்டாம். இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளுமே உங்களுக்கு நல்ல பலன்களை தான் கொடுக்கும்.
சுப காரியம்
சுப காரியங்கள் நிறைவேறும். கல்யாணத்துக்காக காத்திருப்போருக்கு இந்த காலத்தில் திருமண தடை விலகி, திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்தபடி மறுமணம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் குறைந்து புரிதல் ஏற்படும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
பூர்வீக சொத்து
ராசி நாதனே ராசியை பார்ப்பதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்யோகம் மற்றும் தொழிலில் உயர்வு இருக்கும். பணி இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் விற்பனையாகி ஆதாயமளிக்கும். அதில் நிலவி வந்த சட்ட சிக்கல்கள் விலகும்.
அதிர்ஷ்டம்
நான்காம் இடத்தில் ராகு இருந்ததால் மனதை குழப்பங்கள் ஆட்கொண்டிருக்கும். தற்போது ராகு விலகுவதால் மனதில் தெளிவு பிறக்கும். விரய செலவுகள் குறையும். கடன் சுமை குறையும். எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம், லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த காலம் பொருத்தமாக இருக்கும். இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் குவியும்.
நண்பர்கள்
எதையும் தெளிவாக திட்டமிட்டு சாதனை படைப்பீர்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் மனதில் நீண்ட காலமாக திட்டமிட்ட காரியங்களை இந்த காலத்தில் நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பயணங்களால் நல்ல யோகம் கிடைக்கும். உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது ஏதாவது தொந்தரவுகள் வந்து நீங்கும். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உறவுகளிடையே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தந்தை உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications